புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சியில் செயல் அலுவலர் இல்லாத நிலையை பயன்படுத்தி: மக்கள் வரிப்பணத்தில் நாமத்தை ஈட்டும் கிளார்க் (தில்லு முல்லு) ரமேஷ்..?

புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சியில் செயல் அலுவலர் இல்லாத நிலையை பயன்படுத்தி: மக்கள் வரிப்பணத்தில் நாமத்தை ஈட்டும் கிளார்க் (தில்லு முல்லு) ரமேஷ்..? 


திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பணிகள் தேக்கமடைந்து உள்ளதாம்.

புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் உஸ்மாபீ கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றாா். அந்தப் பணியை போளூா் பேரூராட்சி செயல் அலுவலா் முகமது ரிஸ்வான் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறாா்.

அந்த செயல் அலுவலரை யாரும் பாா்க்கமுடியாத நிலை உள்ளதாம் அவா் எப்போது வருகிறாா். எப்போது அலுவலகத்தில் இருக்கிறார். என்பதுகூட பொதுமக்களுக்கும், வாா்டு உறுப்பினா்களுக்கும் தெரிவதில்லை என்கின்றனர். இதனால் பேரூராட்சி நிா்வாகத்தில் பல்வேறு பணிகள் தேக்கமடைந்து உள்ளதாம்.

18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 124 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இந்தப் பேரூராட்சியில் குப்பைகள் அகற்றுதல், குடிநீா் பிரச்னை, கழிவுநீா்க் கால்வாய் பிரச்னை என தினசரி வரும் புகாா்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சியின் தலைமை அதிகாரி கவனத்துக்கு எடுத்துச் சென்றால் மட்டுமே சரிசெய்ய முடியும்.

இந்த நிலையில், தலைமை அதிகாரி இல்லை என்பதால் இரண்டாம் நிலைப் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் (தில்லு முல்லு) ரமேஷ் புகாா் மனுக்களைப் பெற்றுக் கொண்டு மாதத்தில் ஓரிரு நாள்கள் மட்டுமே வரும் பொறுப்பு செயல் அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சி நிா்வாகத்தை கவனிக்கவும், பொதுமக்கள் குறைகள் குறித்து நேரில் பாா்வையிட முடியாத நிலையும் இருந்து வருகிறதாம்.

புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செங்கம் பகுதியை சேர்ந்த இளநிலை உதவியாளர் (தில்லு முல்லு) ரமேஷ் இவர் யாருக்கும் கடுகளவும் பயப்பட மாட்டாராம். புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சி அலுவலக ஊழியர்களும், தூய்மை பணியாளர்களும் அவரை கண்டாலே பயந்து நடுங்கி விடுகிறார்களாம்.

பேரூராட்சி அலுவலகத்துக்கு எந்த செயல் அலுவலர் வந்தாலும் அவர் சொல்பேச்சு கேட்டு தலையாட்டும் பொம்மை போல் நடந்து கொள்ளும் சூழல் உள்ளதாம்.

இது சம்பந்தமாக யாராவது அவரை கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு கவரில் 300 முதல் 500 ரூபாய் போட்டு கொடுத்து விடுவாராம் இது எங்களுடைய வழக்கம் என்று கூறி கொள்வாராம். நான் இன்னும் சில ஆண்டுகள் தான் பணியில் இருப்பேன் ஏனென்றால் நான் பணி ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளதால் கொஞ்சம் அனுசரித்து போங்கள் என்று கூறிக் கொள்வாராம். 

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் எப்போதும் ஊழல் என்று எங்கு பார்த்தாலும் ஊழல் என்று முங்கியதில் இந்த ஆண்டில் முதல் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது இந்த திருவண்ணாமலை மாவட்டம் இதில் புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சிகள் மட்டும் தப்புமா என்ன..? 

வேலூர் மாவட்டம். (பேரூராட்சிகளின்) மண்டலத்திற்கு உட்பட்ட மொத்த இருபத்தி ஆறு பேரூராட்சிகள் உள்ளது இதில் உனக்கு நான் எனக்கு நீ என்னும் சளைத்தவர்கள் இல்லை என்று போட்டி போட்டுக்கொண்டு அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி ஊழல் செய்து வருகின்றனர் இதைத்தொடர்ந்து புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சி நிர்வாகப் பணியை கவனிக்க வரும் செயல் அலுவலர்கள் இதற்கு துணை போகும் இளநிலை உதவியாளர் ரமேஷ் இவர் (தில்லு முல்லு) செய்வதற்கு மிகப் பெயர் போனவரம். அதுமட்டுமின்றி இந்த இரண்டாம் நிலைப் பேரூராட்சி பொருத்தவரை தூய்மை பணியாளர்களுக்கு பணிச்சுமை காரணமாக அதிகம். அதிலும் பணி சுமை வழங்குவதில் துவங்கி அவர்களது பெயரை சொல்லி ஊதியத்தில் கை வைப்பது வரையிலும் எதையும் விட்டுவைக்கவில்லை மேலும் தூய்மைப் பணியாளர், எழுத்தாளர், தண்ணீர் மதகு திறப்பவர், தண்டல் வரிவசூல் செய்பவர், இளநிலை உதவியாளர், அலுவலக ஊழியர்கள் என மாற்றம் செய்யாத முன்னுக்கும் பின் மாற்றம் செய்து அறிவிப்பினை வெளியிடுவது. அதிலும் இளநிலை உதவியாளர் (தில்லு முல்லு) ரமேஷ் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பேரூராட்சியில் தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட்டு வருகிறாராம். மேலும் இவர் மிக தகாத வார்த்தைகளில் பணியாளர்களை பேசுவதும் என சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் இளநிலை உதவியாளர் தில்லு முல்லு ரமேஷ் ஈடுபட்டு வருகிறாராம்.

புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சி அலுவலக மூத்த ஊழியர்கள் தூய்மைப் பணியாளர்கள் அலுவலக பணி செய்து வருவது தொடர்பாக தமிழக பேரூராட்சிகளின் இயக்குனர் கவனத்திற்கு தெரியவருவது தூய்மைப் பணியாளர்கள் அவரவர் பணிகளை மட்டும் செய்ய வேண்டும் அதை மீறி அலுவலக பணி செய்பவர்களை இட்ட பணியை மட்டும் செய்ய வேண்டும் என்ற உத்தரவினை அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தத் தவறுகள் நடக்கும் பட்சத்தில் செயல் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந.க எண் : 0610 நாள் 03/03/2020, ந.க. எண் : 1246 நாள் 06/07/2020 மற்றும் ந.க. எண் 4937 நாள் 17/07/2020 என்ற குறிப்பாணையில் அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த குறிப்பானை பெயரளவுக்குத்தான் பேரூராட்சி செயல் அலுவலர்களும் பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சியில் 2 ஆண்டுகளில் 3 முதல் 4 வரை செயல் அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ளும் இளநிலை உதவியாளர் (தில்லு முல்லு) ரமேஷ் புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அனைத்து ஊழல் பணிகளையும் செய்து வருகிறாராம்.

பேரூராட்சி நிர்வாகத்தில் இளநிலை உதவியாளராக உள்ள தில்லு முல்லு ரமேஷ் இவர் செய்யும் ஊழல்கள் குறித்து நமது நிருபர் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணை செய்தபோது (தில்லு முல்லு) ரமேஷ் ஊழல்கள் குறித்து உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சி பொருத்தவரை (தில்லுமுல்லு) ரமேஷின் ராஜ்ஜியம்தான் பேரூராட்சி நிர்வாகத்தில் என்கின்றனர் அலுவலக மூத்த ஊழியர்கள் கூறும் தகவல்கள்.

தூய்மைப் பணியாளர்கள் பெயரில் பயணப்படி என (travel allowance) செலவு கணக்குகளை வரவு வைத்துக் தொகை கையாடல் செய்யப்படும் அவலநிலை உள்ளது அரசுக் கோப்புகளை கையாள்வது முக்கிய கோப்புகள் மற்றும் காசோலைகளில், தூய்மைப் பணியாளர்கள் பெயரை சொல்லி கையொப்பம் போடும் செயல்களும் படுஜோராக தான் அரங்கேறி வருகிறதாம். தூய்மை பணியாளர்கள் பணிக்கு வராமலே வந்தது போல் கணக்கு காண்பித்து கையாடல் செய்வது என அனைத்து ஊழல் பணிகளும் அரங்கேறி கொண்டேதான் இருக்கிறது தில்லு முல்லு ரமேஷின் செயல்கள் என்கின்றனர். பேரூராட்சியை பற்றி முழு விவரம் அறிந்தவர்கள். அதுமட்டுமின்றி இந்த பேரூராட்சியில் எந்த செயல் அலுவலர் வந்தாலும் அவர்களை கண்ட்ரோலில் எடுத்துக் கொண்டு இவர் கூறும் வேலைகள் எல்லாம் செய்து தரும்படி செயல் அலுவலர்களை கண்ட்ரோல் செய்வாராம் என கூறப்படுகிறது.

மேலும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த செயல் அலுவலர்கள் மீதும் மற்றும் இளநிலை உதவியாளர் தில்லு முல்லு ரமேஷின் மீது இதுவரை வேலூர் மாவட்டம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை 

ஆகவே இனியாவது இளநிலை உதவியாளர் (தில்லு முல்லு) ரமேஷின் மீது தமிழக பேரூராட்சியின் இயக்குனர், உள்ளாட்சித் துறை நிர்வாகம், நகர்ப்புறத்துறை மந்திரி கே.என்.நேருவின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Comments