குற்றால அருவியில குளிச்சது போல் இருக்குதா..?? .... என்று விடுமுறையை கொண்டாட ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றால அருவியில குளிச்சது போல் இருக்குதா..?? .... என்று விடுமுறையை கொண்டாட ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் அமைந்துள்ளது ஒகேனக்கல் சுற்றுலா தலம்.

காவிரி ஆறு அருவியாக ஆர்ப்பரித்துக் கொட்டும் பிரதான நீர்வீழ்ச்சி மற்றும் ஐந்தருவி பகுதிகள் பார்ப்பவர்களை தன்வசப்படுத்தும் இயற்கை கொடையாகும்.
தொடர் விடுமுறையை கழிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகம் ஆந்திரம் கேரளம் மற்றும் புதுவை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இன்று ஒகேனக்கலில் குவிந்திருந்தனர்.

குடும்பத்தோடு குதூகலமாய் விடுமுறையை கழிக்க ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் முதலில் ஆயில் மசாஜ் செய்து பிரதான அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

ஒகேனக்கலில் இன்று இயல்பான சீதோசன நிலை நிலவியதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் பலரும் குடும்பத்தோடு காவிரி ஆற்றின் பாதுகாப்பான பகுதிகளில் நீராடினர்.

ஐந்தருவி பகுதியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சியின் சாரலில் நனைந்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், இனிமையான பரிசில் பயணம் குடும்பத்தோடு மேற்கொண்டு அதே சாரல் மலையில் பரிசலில் சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமிழக அரசின் ஹோட்டல் தமிழ்நாடு மற்றும் தாவரவியல் பூங்கா சிறுவர் பூங்கா பகுதிகளில் சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

Comments