தீபாவளி பண்டிகை முன்னிட்டுதர்மபுரி காவல்துறை முழு உஷார் நிலை...மக்கள் பாதுகாப்பு. சட்டம் ஒழுங்கு முக்கியம்...தர்மபுரி எஸ். பி. ஸ்டீபன் ஜேசு பாதம் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு
தர்மபுரி காவல்துறை முழு உஷார் நிலை
மக்கள் பாதுகாப்பு. சட்டம் ஒழுங்கு முக்கியம்
தர்மபுரி எஸ். பி. ஸ்டீபன் ஜேசு பாதம் எச்சரிக்கை

 இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் நகர் பகுதியில்  அனைத்து கடைகளிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் அலை மோதுவதால் போலீசார் முழு அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்

 தர்மபுரி மாவட்டம், தர்மபுரி நகராட்சியிலும், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பொம்மிடி, கடத்தூர், பாலக்கோடு, காவேரிப்பட்டினம், நல்லம்பள்ளி, கம்பைநல்லூர், மாரண்டஅள்ளி என பேரூராட்சிகளிலும் கடைவீதி முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது

 இரு சக்கர வாகனங்கள், கார்கள், சாலைகளில் அணிவகுத்து பெரும் போக்குவரத்து நெரிசலையில் ஏற்படுத்திய வருகின்றனர்
 போக்குவரத்தை சீர் செய்வதில் போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்,

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு மாவட்ட எஸ்,பி கூடுதல் எஸ்பி 1
  டி .எஸ் .பி .12 பேர்
 இன்ஸ்பெக்டர் 38
பேர் 
காவலர்கள் மொத்தம் சுமார் ஆயிரம் பேர் என மாவட்டம் முழுவதும்
 24 காவல் நிலையங்கள், 4 மகளிர் காவல் நிலையம் ,4 உட்கோட்டங்கள்.11 சிறப்பு பிரிவு காவல்துறை என ஒட்டுமொத்த காவல்துறையையும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு பணியையும் ,குற்ற செயல்களை தடுக்கவும் ,மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்
 இதனால் ஒட்டுமொத்த காவல்துறையின் தீபாவளி பாதுகாப்பு பணிக்கு முடுக்கி விடப்பட்டுள்ளது

 தர்மபுரி மாவட்டத்தில் கிராமப் பகுதியில் அதிகம் உள்ளதால், நகர் பகுதிக்கு தங்கள் தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதையும், ஆடைகள் வாங்குவதற்காகவும் நகர் பகுதியில் குவிந்து வருகின்றனர்


 தர்மபுரி மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அரசு விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆகியோர் உத்தரவின் பேரில் கல்லூரிகள், பள்ளிகளிலும்,  தீ விபத்துக்கள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதில் உள்ளாட்சி நிர்வாகங்களும், காவல்துறையின் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்


 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பது குறித்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், காவல் துறை, தீயணைப்புத்துறை என அனைத்து துறைகளும் முழு கவனம் செலுத்தி, விதிமுறைகள் கவனிக்கப்படுகின்றனவா? என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்


 பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டும். விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கப்பட்டுள்ளது


 விதிமுறைகளுக்கு உட்பட்ட 200 கடைகளுக்கு மட்டுமே தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது


 அனுமதி இல்லாத கடைகள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


 பொதுமக்கள் பாதுகாப்பாக கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவதற்கும், ஆடைகள் வாங்குவதற்கும், சமூக விரோதிகளால், திருட்டு, வழிப்பறி கொள்ளை போன்ற நிகழ்ச்சிகள் நடந்து விடக்கூடாது


 மேலும் பெண்கள் மீது பாலியல் சீண்டல்கள் நடந்து விடக்கூடாது, என்பதற்காக மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஏசுதாஸ் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்


 மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலமாக ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்


 தர்மபுரி மாவட்டத்தில் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் ஏற்கனவே திருட்டு வழக்கில் ஈடுபட்டவர்களையும் ,குற்றப் பின்னணி உள்ளவர்களையும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள்  எடுத்து வந்துள்ளனர்


 காவல்துறை சீருடை அணியாத போலீசாரும் மாவட்டம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் மக்களோடு மக்களாக தீவிரக் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்



 குற்ற செயல்களை முழுவதுமாக தடுக்கும் பொருட்டு காவல்துறை தீவிரப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்


 ஒட்டுமொத்தமாக போக்குவரத்து துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை என அனைத்து துறைகளும் இணைந்து விபத்து இல்லாத தீபாவளியையும், குற்ற நடவடிக்கை இல்லாத தீபாவளியையும், கொண்டாடுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் தர்மபுரி மாவட்ட மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் பண்டிகை கொண்டாட தர்மபுரி மாவட்ட காவல்துறை


 தருமபுரிமாவட்டத்தில் உள்ள மக்கள்பண்டிகை கொண்டாடுவதை தொடர்ந்து


 மக்கள் பாதுகாப்பு பணியில் தங்கள் தூக்கத்தை விட்டு தியாகத்திற்கு தயாராகியுள்ளனர் காவல் துறையினர் என்று கூறலாம்

Comments