5 மாதங்களாக மூடிக்கிடக்கும் ஈகுவார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ..!!! மக்கள் அவதி..?

கும்மிடிப்பூண்டி வட்டம் ஈகுவார்பாளையம் சுற்று வட்டாரத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ வசதி உடனடியாக கிடைக்கும் என்றால் அது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தான்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில்   உள்ள ஆப்ரேசன் தியேட்டர் கடந்த 5 மாதங்களாக  மூடி கிடக்கிறது.

இதனால் நோயாளிகள், மற்றும் மருத்துவத் தேடி வரும் மக்கள்  சென்னை வரை சென்று சிகிச்சை பெறும் மோசமான நிலை உருவாகியுள்ளது. 
இதனால்  பெண்கள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். 

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியை ஆய்வு செய்து 
உடனடியாக ஆபரேசன் தியேட்டர் மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டுவரவேண்டும் என 
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments