பாப்பிரெட்டிப்பட்டி அருகே சர்க்கரை ஆலையில் இரவில் போராட்டம் ஸ்தம்பித்து நின்ற 150 கரும்பு வாகனங்கள் dsp ஜெகநாதன் இறங்கியதால் 3 மணி நேரத்திற்கு பிறகு இயங்கிய கரும்பாலை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சர்க்கரை ஆலையில் இரவில் போராட்டம்
ஸ்தம்பித்து நின்ற 150 கரும்பு வாகனங்கள்
dsp ஜெகநாதன் இறங்கியதால் 3 மணி நேரத்திற்கு பிறகு இயங்கிய கரும்பாலை
சர்க்கரை ஆலையில் அரவை துவங்கிய சில தினங்களிலேயே லாரி வாடகை உயர்த்தி கேட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே அரசுக்கு சொந்தமான கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது
இந்த ஆலைக்கு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கரும்பு அரவைக்கு அனுப்பி வைக்கின்றனர்
இந்த ஆலையின் அரவை சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் துவக்கி வைக்கப்பட்டது,
ஆலை அரவை துவங்கிய நாள் முதலாக கரும்பு லோடு ஏற்றி வரும் வாகனங்களுக்கு வாடகையை உயர்த்தி தர வேண்டுமென லாரி உரிமையாளர், பாரம் ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து ஆலை நிர்வாகத்திடம் வாடகை உயர்த்தி தர கோரிக்கை வைத்து வந்தனர்
ஆலை நிர்வாகம் செவிசாய்க்கவில்லை எனக் கூறி நேற்று இரவு ஆலைக்குள் லோடு ஏற்றி வந்த 150 க்கு மேற்பட்ட கனரக வாகனங்கள், அரவைக்கு இறக்கி விடாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த திடீர் போராட்டத்தால் ஆலை வளாகப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது
உடனடியாக ஏ. பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் காவல்துறையினர் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குவிக்கப்பட்டனர்
உடனடியாக அரூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் ஒரு மணிநேரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்
பிறகு ஆலையில் மேலாண்மை இயக்குனர் பிரியா போராட்டக்காரர்களிடம் உங்களது கோரிக்கையை சில தினங்களில் பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ளலாம் ஆலை இயங்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்
அவரது பேச்சுவார்த்தையின் போது லாரி உரிமையாளர்கள் சில தினங்களில் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனையை தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஆலை நிர்வாகம் வழங்கிய உறுதி மொழியை எடுத்து போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்த போராட்டத்தால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை கரும்ப அரவை லோடு இறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது, பின்பு வழக்கம் போல ஆலைகள் செயல்பட தொடங்கியது
இச் சம்பவத்தால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது
Comments
Post a Comment