தென்காசியில் கடந்த 10 ஆண்டுகளாக மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது தாய் மீண்டும் வந்து தன்னிடம் பேச மாட்டாரா என குழந்தைகள் கண்ணீர் மல்க காத்திருக்கின்றன தாயின் மருத்துவத்திற்காக தமிழக அரசுக்கு உதவிக்கரம் நீட்ட கோரிக்கையும் விடுத்துள்ளனர்


தென்காசியில் கடந்த 10 ஆண்டுகளாக மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது தாய் மீண்டும் வந்து தன்னிடம் பேச மாட்டாரா என குழந்தைகள் கண்ணீர் மல்க காத்திருக்கின்றன தாயின் மருத்துவத்திற்காக தமிழக அரசுக்கு  உதவிக்கரம் நீட்ட கோரிக்கையும் விடுத்துள்ளனர்



தென்காசி எல் ஆர் எஸ் பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார் இவருக்கு 41 வயதான ரேவதி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பால மாறி என்ற பெண் குழந்தையும் நான்காம் வகுப்பு படிக்கும் பால மாரியப்பன் என்ற ஆண் குழந்தை என இரு குழந்தைகள் உள்ளன ரேவதிக்கு இரண்டாவது மகனான பாலமாரியப்பன் பிறக்கும்போது அவரது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் ரேவதிக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்படும் வந்துள்ளது இந்த நிலையில் திடீரென ரேவதிக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது இதனால் அவர் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் ஒரு சில வாரங்கள் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார் இருப்பினும் ரேவதிக்கு உடல் நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை நாளுக்கு நாள் அதிகரித்த நோய் காரணமாக அவர் மிகுந்த பாதிப்படைந்து படுக்கையிலேயே இருந்துள்ளார் நாளடைவில் டியூப் மூலம் மட்டுமே அவர் உணவு உண்டு வந்துள்ளார் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அவ்வபோது தனது குறைந்த பொருளாதாரத்தை வைத்து பாலசுப்பிரமணியன் சிகிச்சை பார்த்து வந்துள்ளார் இந்த  மூளைக்காய்ச்சலால் கடந்த 10 ஆண்டுகளாக தற்போது வரை அவர் எந்த ஒரு சுயநினைவுமின்றி உயிருக்கு போராடி தவித்து வருகிறார் கூலி தொழிலாளியான பாலசுப்பிரமணியன் தன்னுடைய பொருளாதாரம் மிகவும் பின்தங்கி இருப்பதால் என்னால் முயன்றவரை நான் சிகிச்சை பார்க்கிறேன் எனவும் என்றாவது ஒருநாள் தனது மனைவி திரும்பி வந்துவிட்டால் போதும் என இருப்பதாகவும் அவர் கூறினார் ரேவதி மகள் பாலமாரி தனது தாய் தன்னிடம் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனதாக கண்ணீர் மல்க தெரிவித்தார் மேலும் தமிழக அரசு தங்களுக்கு உதவி கரம் நீட்டி தங்களது தாயை தங்களுக்கு மீட்டுத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர் தற்போது திருநெல்வேலியில் ரேவதியின் தாயார் வீட்டில் ரேவதி உள்ளார் பாலசுப்பிரமணியன் அவ்வபோது சென்று பார்த்து தன்னால் என்ற பணத்தையும் கொடுத்துவிட்டு வருகிறார்

Comments