SNB தனியார் பேருந்தின் அதிவேகத்தால் பறி போன உயிர் கட்டுப்பாடு விதிப்பார்களா போக்குவரத்து அதிகாரிகள்..!!


சேலம் - அரூர் வழிச்சாலையில் உள்ள அதிகாரப்பட்டி சாலையை கடக்க நின்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கணவன் மனைவி மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே மனைவி உயிர் இழந்தார்.கணவர் சிகிச்சை பெற்று வருகிறார்

சேலம் - அரூர் திருப்பத்தூர் வழியாக தினந்தோரும் செல்லும் SNB தனியார் பேருந்து நேரம் குறைவாக இருக்கிறது என்ற நோக்கில் பேராபத்தை ஏற்படுத்த கூடிய அளவிற்கு அதிவிரைவாக செல்லும் இந்த பேருந்து வந்தாலே அந்த நேரம் இப்பகுதியில் உள்ள மக்களோ, காவல் துறையினரோ, சாலையை கடக்க அஞ்சி நடுங்குவார்கள்.

இந்த  பேருந்து மீது பல முறை அரூர் போக்குவரத்து ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தும் அந்த பேருந்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் மீண்டு மீண்டும் அதிவேக பேருந்து பயணத்தால் இன்று காலை அதிகாரப்பட்டி அருகே உள்ள தனது உறவுக்காரரின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்று வந்த மாரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ், தீர்த்தம்மால்,  இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்கும் நின்று கொண்டிருந்த போது  அதிவேகமாக வந்த பேருந்து உரசியதில் இருவரும் சாலையில் தூக்கி வீசபட்டதில் சிவராஜ் மனைவி தீர்தம்மால் சம்பவ இடத்திலேயே பலியானார். கணவர் சிவராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் பேருந்து அதிவேகமாக வந்ததால் எதிர் புறம் வந்த லாரியை கடக்க முடியாமல் சாலையை கடக்க நின்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிய பேருந்தால் விபத்துக்குள்ளாக்கபட்டது. இது குறித்து சம்பவம் அறிந்து கிராம அலுவலர், அ. பள்ளிப்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டனரை அ. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

Comments