ஏழ்மையில் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி NGO அமரர் சேவையினர்

ஏழ்மையில் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி NGO அமரர் சேவையினர்

தருமபுரி மாவட்டம் *பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த குப்பன்* என்ற வயதான முதியவர் நேற்று இரவு சாலையோரத்தில் ஆதரவற்று இறந்து கிடந்தார். இவரது பிரேதத்தை கைப்பற்றி காவல்துறை விசாரித்ததில் இவரது உறவினர்கள் கிடைத்தனர். இவரது மனைவி, மருமகள், பேத்திகள் மட்டும் உள்ளனர். கடந்தாண்டு *இவரது மகன் இறைவனடி சேர்ந்துள்ளார்*. இவரது உடலை நல்லடக்கம் செய்ய போதிய வசதி இல்லாமல் குடும்பத்தினர் தவித்த செய்தி மை தருமபுரி அமைப்பிற்கு கிடைத்தது. மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் *சமூக சேவகர் அருணாசலம், சமூக சேவகர் ஜாபர், கனிஷ்கர்* ஆகியோர் பாப்பாரப்பட்டி காவல்துறையுடன் இணைந்து இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இதுவரை *மை தருமபுரி அமரர் சேவை மூலம் 63 புனித உடல்களை நல்லடக்கம்* செய்துள்ளோம். *மரணம் என்ற ஒன்றை அடையாதவர்கள் எவரும் இல்லை மரணிப்பவர்களிடமும் மனித நேயம் பகிர்வோம்.*

Comments