தருமபுரிக்கு உதயநிதி வருகை பழனியப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதிக்கு வருகின்ற 26 ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அவர்களின் தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர்,
பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் கூறியதாவது விளம்பர பேனர் வைக்கும் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விளம்பர பேனர் வைக்கவேண்டும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் கலைஞர் நூலகம் திறக்கவேண்டும். அதற்கான பணிகளை நாம் தீவரப்படுத்த வேண்டும். நூலகத்தை திறக்க அமைச்சர் உதைய நிதி ஸ்டாலின் அவர்களின் கனவு. அந்த கனவு பல லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் வெளிச்சத்தை உருவாக்க வேண்டும். என்பதே அமைச்சர் உதயநிதி அவர்களின் நோக்கம் அதற்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும். அமைச்சர் உதயநிதி வரும்போது பட்டாசு வெடிக்க கூடாது. மாலை அணிவிக்க கூடாது, புத்தகம் மட்டுமே கொடுக்க வேண்டும், கொரோனா காலக்கட்டத்தில் இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு நாம் கல்வி சார்ந்த உதவிகளை செய்ய உள்ளோம் ஆகவே கொரோனா காலக்கட்டத்தில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் இருந்தால் அழைத்து வாருங்கள். இங்கு பெற்றோர்கள் இல்லையே அதனால் கல்வி நமக்கு கிடைக்காது என்ற சிந்தனையில் எந்த குழந்தைகளும் இருக்க கூடாது என்பதே நமது திமுகவின் நோக்கம் என்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநிலம், மாவட்டம், ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள், திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment