தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய கருத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் எழுத்து நிலையில் உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டினால் 10 கோடி ரூபாய் பரிசு என அறிவித்திருந்த சூழலில் இந்த சாமியாரின் கருத்து இந்தியா முழுவதும் அதிர்ச்சியை கிளப்பி தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனால் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உத்தரப்பிரதேச சாமியாரின் உருவ பொம்மையின் மீது பயர்ணத்தம் ( சாமியார் பூக்கடை வெங்கடேசன் )
செருப்பால் அடித்து தீ வைத்து பற்றவைத்து உத்தரப்பிரதேச சாமியாருக்கு தமிழ்நாடு சாமியார்கள் சார்பில் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சாமியாரை ஆவேசமாக விமர்சனம் செய்தனர்.
Comments
Post a Comment