பாப்பிரெட்டிப்பட்டி அருகே பட்டா நிலத்திலும் வீட்டு வாசல் முன்பும் மின் கம்பம் நட பொதுமக்கள் எதிர்ப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பட்டா நிலத்திலும் வீட்டு வாசல் முன்பும் மின் கம்பம் நட பொதுமக்கள் எதிர்ப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே அமைந்துள்ள திருமலை நகர் குடிருப்பு பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி மின் வாரியம் மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருமலை நகர் பகுதியில் வசிக்கும் சுவிதா என்பவரின் வீட்டு வாசலில் மற்றும் நீரோடை பகுதியிலும் மின் கம்பம் நடபட்டுள்ளதால் எதிர்காலத்தில் எங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அருகில் உள்ள பொருளாதாரத்தில் உள்ளவருக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்பட்டு கொண்டு எங்களது வீட்டு வாசலில் மின் கம்பத்தை பத்திதுள்ளனர்.
மற்றும் நீரோடை கால்வாயிலும் மின்கம்பத்தை நடுவதால் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு மின் கம்பம் சாயும் அபாயம் உள்ளதென்று தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்தும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை ஏற்கனவே குடியிருப்பு பகுதிகளில் ஒட்டியவாறு மின் கம்பிகள் செல்வதால் பல்வேறு இடங்களில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. அது போன்ற விபரீதமான செயல் நடக்க கூடாது என்பதற்காகவும் எங்களின் உயிர் பாதுகாப்பிற்காகவும் மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ஏ இ வெங்கடேஷ் அவர்களிடம் கேட்டபோது நாளை காலை மின கம்பத்தை மாற்றியமைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார்.
இந்த பணியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வடநாட்டு இளைஞர்களை கொண்டு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment