ஜெ எடுத்த கண்ணிய முடிவு, பாஜகவின் உறவு முறிவு..பிரதமர் தகுதிக்கு தயாராகுவாரா எடப்பாடி..!!!
அதிமுக ? பாஜக ? நாங்களா நீங்களா என்று தோணியில் அதிமுக பாஜக கட்சி கூட்டணிக்குள் அவ்வபோது பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது. காரணம் தமிழக பாஜக வின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் செயலை பற்றியும், அண்ணாவை பற்றியும் மேடைகளில் விமர்சனம் செய்துள்ளார்.
இதனால் அதிமுக அமைச்சர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்த போது தற்போதுள்ள தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கூட கண்டனம் தெரிவித்தார். காரணம் அந்த அளவிற்கு அம்மாவின் அரசியல் பயணம் செயல்பட்டுள்ளது.
காலப்போக்கில் அதிமுக அமைச்சர்களின் கருத்துகளுக்கும், அவர்களின் செயலுக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சி வி சண்முகம், அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சசிகலா, திமுக கட்சியை சேர்ந்த ஆர் எஸ் பாரதி போன்றவர்கள் கடுமையான கண்டனத்தையும் தங்களுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்தினர். ஆனால் இதுவரை அண்ணாமலை கருத்துக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துணிவாக எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை.
இதனால் அதிமுக கட்சியில் உள்ள அண்ணா மற்றும், பெரியாரின், ஆதரவாளர்கள், எடப்பாடியின் மெளனத்தை கண்டு வேறு கட்சிக்கு மாறிவிடலாமா ? என்ற சிந்தனையிலும், கலக்கத்திலும் வருத்தத்திலும் உள்ளனர். காரணம் அந்த அளவிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் கண்ணியம், திறமை, கட்டுப்பாடு, செயல்பாடு, விவேகம், வீரம், கருணை, கோபம், அன்பு, என்று பேசும் வரலாறு கொண்ட கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தது.
அப்படிப்பட்ட கட்சியின் முன்னர் இருந்த வரலாறு என்ன தெரியுமா ?
இந்திய அரசியல் வரலாற்றில் இரும்பு பெண்மணி என்று பேசப்பட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள். ஒரு காட்டுக்கு ராஜா ஆண் சிங்கம் என்று சொல்வார்கள் ஒரு நாட்டிற்கு கம்பீரமான பெண் சிங்கமாய் பயணம் செய்தவர் ஜெ அவர்கள். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் அந்த தவறு பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வைக்காது என்று லட்சக்கணக்கான தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்படிப்பட்ட அம்மாவின் செயலுக்கு துரோகம் செய்து பயணிக்கிறாரா? என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்து வருகிறது.
பிறகு 2014 நாடாளுமன்ற தேர்தல் நேரம் அருகில் வரும்போது திடீரென காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் அதிமுக தனித்து நிற்கும் என்று அறிவித்தார். இதனால் அதிமுகவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். மறுபக்கம் எதிர்கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாமக, பாஜக, குஷி மூடில் இருந்தது.
ஆனால் கலக்கத்தில் இருந்த அதிமுக தொண்டர்களுக்கு மறக்க முடியாத சந்தோசத்தையும் குஷி மூடில் இருந்த எதிர்க்கட்சிகளுக்கு ஆப்பு வைத்து 39 தொகுதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, மாநிலத்தில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவு. பிறகுதான் அம்மாவை கண்டு இந்திய அரசியல் வல்லுனர்கள் எல்லோரும் உறைந்து போய் இருப்பதை அதிமுக தொண்டர்கள் உணர்ந்தனர் அந்த அளவுக்கு பேர் கொண்ட கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
அப்படிப்பட்ட கட்சியில் இருக்கும் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏன் பாஜகவுடன் ஒண்டி நிற்க வேண்டும் என்ற கேள்வியோடு அதிமுகவை வெறுத்து கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை தமிழக மக்கள் தோற்கடித்தனர். ஆனால் இதற்கான காரணம் தெரிந்தும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக பயணம் செய்தால் மீண்டும் தோல்வியைத்தான் சந்திக்கும் என அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் கூறுகின்றனர். மக்களுக்காக போராட நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் "மக்களின் மனதில்" கூட்டணி யாருடன் வைக்க வேண்டும் என்ற சிந்தனையை கூட அறியாமல் இருக்கிறார் என அடிப்படை தொண்டர்கள் புலம்பி தவிக்கின்றனர். இதில் ஒரு சில எம் எல் ஏ க்கள் கூட..!
டெல்லியில் இருந்து எந்த கட்சி வந்தாலும் சரி நாம் யார் என்பதை நிரூபித்து காட்டுவோம் என பகிரங்கமாக சவால் விட்டு அரசியல் ராஜ்ஜியத்தை பெற்றவர் அம்மா ஜெயலலிதா அவர்கள். இந்த அளவிற்கு அதிகாரம் கொண்ட அம்மாவின் வழியில் வந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஏன் பாஜகவை எதிர்க்கவும், காங்கிரசை எதிர்க்கவும் துணிவு இல்லை ஒரு வேளை பாஜகவை எதிர்த்து நின்றால் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது பல்வேறு டெண்டர் மூலமாக எடுக்கப்பட்ட பணத்தை கொத்தாக அண்ணாமலை தூக்கி விடுவாரா ? என்ற பயத்தில்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் என அதிமுக எம் எல் ஏ.க்களும், அமமுக, திமுகவை சார்ந்தவர்கள் கூட பேசிவருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மக்கள் மீது நம்பிக்கையா ? பாஜகவை கண்டு பயமா ? என சமூக வலைதளங்களில் கூடப் பேசுகின்றனர்.
இப்படி பல விமர்சனங்கள் இருந்தாலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தெரிந்தும் கூட அமைதியாகத்தான் இருக்கிறார் என்று ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டுகின்றது.
குடும்பத்திற்கு தாய் எப்படி முக்கியமோ அந்த அளவிற்கு அதிமுக கட்சிக்கு பேரறிஞர் அண்ணா இருந்தார்.
ஒரு மனிதனுக்கு உயிர் இவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அதிமுகவை உயிர் நாடியாக காப்பாற்றி வந்தார்.
அப்படி இருந்தவர்களை பாஜகவில் உள்ள அண்ணாமலை விமர்சித்து இருக்கிறார் அதையும் பார்த்து அண்ணண் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக இருக்கிறாரே என அதிமுக வின் முக்கிய வி ஐ பிக்கள் பொழம்புகின்றனர்.
நிச்சயமாக அதிமுக தனித்து நின்றால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும், எடப்பாடி பழனிச்சாமி அண்ணண் முதல்வர் ஆவார்,
டெல்லியில் இருந்து எந்த கட்சி வந்தாலும் துரத்தி அடித்து எடப்பாடி அண்ணனை பிரதமர் உருவாக்க அடுத்த கட்ட நடவடிக்கையில் தொண்டர் படைகளை திரட்ட தயாராக இருக்கின்றோம் என முன்னாள் அமைச்சர்கள் அழுத்தமாக தெரிவிக்கின்றனர்.
உண்மையில் அம்மாவின் மீதும் தொண்டர்கள் மீதும் விசுவாசம் நம்பிக்கை, இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனித்து நின்றால் அவர் முதல்வரும் ஆகலாம் எதிர்காலத்தில் பிரதமர் கூட ஆகலாம் என அரசியல் உளவுத்துறை தெரிவிக்கின்றது. இப்படியெல்லாம் நடக்க திடீரென்று யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஜேபி நட்டா அவர்களிடம் கூட்டணி பற்றி பேசிவிட்டு வந்துள்ளார் என ஒரு பக்கம் அலசல் புலசலாக பேசிக்கொண்டாலும் இன்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றவில்லை என்றால் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என ஜே பி நட்டாவிடம் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment