அண்ணதானம், மக்களின் அன்பின் பெருவெள்ளம் தர்மபுரியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

தர்மபுரியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி என்றாலே நாடு முழுவதும் விநாயகர் சிலையை வைத்து கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தர்மபுரியில் இன்று மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடப்பட்டது.
தர்மபுரி நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நந்தி மீது அமர்ந்த விநாயகர் எலி வாகனத்தில் அமர்ந்த விநாயகர் மூன்று விநாயகர்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதில் விநாயகருக்கு பிடித்த உணவான கொழுக்கட்டை எள்ளுருண்டை கொய்யாப்பழம் ஆப்பிள் ஆரஞ்சு என பல்வேறு வகையான பழங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு கோவில் நிர்வாகி குமரன் சார்பில் வெஜிடபிள் ரைஸ் அன்னதானமாக வழங்கப்பட்டது.

Comments