உதயநிதி தலைக்கு விலை பேசிய உத்தர பிரதேச சாமியாரின் உருவ பொம்மை எரிப்பு... தமிழக முழுவதும் பற்றி எரியும் சாமியார் புகைப்படம்


உதயநிதி தலைக்கு விலை பேசிய உத்தர பிரதேச சாமியாரின் உருவ பொம்மை எரிப்பு


 பாப்பிரெட்டிப்பட்டி. செப், 7-

 திமுக இளைஞரணி தலைவரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி வருபவர்களுக்கு 10 கோடி வருவதாக அறிவித்த உத்தர பிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது


 தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி திமுக  மேற்கு ஒன்றிய  செயலாளர் பி. எஸ். சரவணன் தலைமையில் பெண்கள் உட்பட 100க்கு மேற்பட்டவர்கள் பையர் நத்தம் பேருந்து நிறுத்தம் அருகில் ஒன்று கூடி  உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தை நடத்தினர்.


 இந்த போராட்டத்தின் போது  சாமியாரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து தூக்கி ஏறி வரப்பட்டது, அப்போது திமுகவினர் பெண்கள் சாமியாரின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும் பெண்கள போராட்டத்தில் ஈடுபட்டனர்,


  இந்த போராட்டத்தில் போது மத வாதத்திற்கு எதிராக கோஷம் எழப்பப்பட்டது

இந்த போராட்டத்தில் பையர்  நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா குப்புசாமி, பி, பள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமலா தினேஷ், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன். ஒன்றிய துணை செயலாளர் ஜாதிக ஹரிப்., வடக்கு ஒன்றிய செயலாளர் செல்லதுரை.ராம்குமார்  மற்றும் ஏராளமான திமுகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பொம்மிடி காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இந்ததிடீர் போராட்டத்தால்  இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Comments