தருமபுரி மாவட்ட ஆட்சியரே..! உளவுத்துறையே ! அதிகாரப்பட்டி பஞ்சாயத்து மீது நடவடிக்கை எடுக்க தயாராகுங்கள்..... ஊழலில் மிதந்து செல்கிறது...!..செய்தி எடுக்க சென்றால் ரௌடிசம்...!* *தூங்கும் பாப்பிரெட்டிப்பட்டி ( BDO ) அலுவலகம்*
*அதிகாரப்பட்டி பஞ்சாயத்து மீது நடவடிக்கை எடுக்க தயாராகுங்கள்..... ஊழலில் மிதந்து செல்கிறது...!!!!*
*செய்தி எடுக்க சென்றால் ரௌடிசம்...!*
*தூங்கும் பாப்பிரெட்டிப்பட்டி ( BDO ) அலுவலகம்*
தர்மபுரி மாவட்டம் அதிகாரப்பட்டி பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் மற்றும் பெண்களுக்கான மகாத்மா காந்தி ஊரக வேலை பணிகளை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக மாரியம்பட்டி கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து அதிகாரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் அலுவலகத்திற்கு சென்றோம். அப்பொழுது அங்கே பஞ்சாயத்து தலைவர் ஏசோதா அவர்களுடைய கணவர் ஜெயராமன் மற்றும் கிளார்க் கிருஷ்ணமூர்த்தி இருந்தார். பஞ்சத்து தலைவர் இல்லையா என்று கேட்டோம் சிரித்தபடி இவர் தான பஞ்சாயத்து தலைவர் என்றார் கிளார்க். அண்ணே மாரியம்பட்டி பெண்களுக்கு ஏரி வேலை இல்லை என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி பழ மரங்கள், புங்கை மரங்கள், நடபட்டதாக கூறினீர்கள் அதற்காக 20500 ரூபாய் செலவு செய்தோம் என்று சொன்னீர்கள், மரக்கன்றுகளை எங்கு வாங்கினீர்கள் என்று கேள்வி எழுப்பினால் மஞ்சவாடி பகுதியை தாண்டி தனியார் நர்சரி கார்டனில் வாங்கினோம் என்றார் பஞ்சாயத்து தலைவர் கணவர் ஜெயராமன். அதனுடைய முகவரி கொடுங்கள் என கேட்டோம் அப்படியெல்லாம் தரமுடியாது. நீங்க எழுதி கொடுத்து வாங்கி கொள்ளுங்கள் என்றார். அப்போது பேசிக்கொண்டே இருந்த கிளார்க் மாரியம்பட்டி 3 வது வார்டு உறுப்பினர் சின்னபொண்ணு மகன் திருப்பதியை அழைத்து செய்தியாளர் மணிபாரதி பிரச்சனை செய்கிறார் என வரச்சொல்லி இருக்கிறார். இதனால் சொந்த வேலைக்காக சென்ற திருப்பதி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து நீ யாருடா எங்க பஞ்சாயத்தில் வந்து செய்தி எடுக்க நீ எந்த ரிப்போர்ட்டர் ஐடி கார்டு கொடு நீ பிச்சை எடுத்து பொழப்பு நடத்துற, மிரட்டி திங்குற என செய்தியாளரை பற்றி பேசுகிறார். ஆனால் கைப்புள்ள தோணியில் மிரட்டும் பேசும் நபரின் ஊர் காரர் தான் செய்தியாளர்.என்பதை உணராமல் வாய்க்கு வந்த படி பேசியுள்ளார் திருப்பதி என்ற நபர். சண்டியை பயங்கரமாக மூட்டி விட்டு ஒன்றும் தெரியாதது போல் சமாதானம் செய்ய களத்தில் இறங்கினார் கிளார்க் கிருஷ்ணமூர்த்தி. இறுதியாக கூட்டாக சேர்ந்து நடந்த ஊழலை மறைக்க அண்ணே ஜூனியர் ரிப்போர்ட்டர் - எவிடன்ஸ் ரிப்போர்ட்டர் என்று வந்தானா எதும் பதில் சொல்லாதிங்க, அப்படி எதாவது கேட்டால் எங்களை மிரட்டி பணம் கேட்டான் என வழக்கு கொடுங்கள் உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்று பேசிவிட்டு செல்கிறார் அந்த திருப்பதி என்ற நபர். இவர் வார்டு உறுப்பினராக இருக்கும் மகனாக உள்ளவர் அதிகாரப்பட்டியில் உள்ள நிழற்கூடம் முள்ளால் அடைக்கபட்டதை பற்றி இதுவரை கேட்டதில்லை. ஆனால் இது குறித்து எம் பி செந்தில்குமார் அவர்களிடம் ஜூனியர் ரிப்போர்ட்டர் எவிடன்ஸ்பார்வை சார்பில் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது.
நியாமான விசியங்களை மக்களுக்காக எடுக்கும் போது இப்படி ஊழல் வாதிகளுக்கு ஆதரவாக ஒரு சில நபர்கள் ரவுடிசம் செய்து செய்தியாளர்களை மிரட்டி வருகின்றனர். இவர்களை போன்ற நபர்களை காவல்துறை கண்காணித்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த செய்தியாளர்களின் கருத்தாக உள்ளது.
Comments
Post a Comment