விலையில்லா மிதிவண்டி நிகழ்ச்சிவெறுப்பேற்றிய ஒன்றிய செயலாளர் சரவணன் - கோவிந்தசாமி எம்எல்ஏ அதிர்ச்சி

விலையில்லா மிதிவண்டி நிகழ்ச்சி
வெறுப்பேற்றிய ஒன்றிய செயலாளர் சரவணன்
கோவிந்தசாமி எம்எல்ஏ அதிர்ச்சி

 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கோவிந்தசாமி இவர் அதிமுகவின் மாவட்ட பொறுப்பை பிடிப்பதற்காக எடப்பாடி ஆசி கிடைக்கும் என்பதற்காக எடப்பாடியாரை கவரும் வகையில் தான் செல்லும் அரசு நிகழ்ச்சிகளில் துவக்க விழாவில் எடப்பாடி  படத்தை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி பாப்பிரெட்டிப்பட்டி  ஒன்றிய திமுகவினரை வெறுப்பேற்றி வந்தார்

 திமுகவினர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமிக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஸ்கெட்ச் போட்டனர்


 அதன்படி பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் திமுகவினர் எம்எல்ஏ கோவிந்தசாமிக்கு டப்க கொடுக்க தொடங்கியுள்ளனர்

அதன் ஒரு நிகழ்ச்சியாக பி. குறிஞ்சி பட்டியில் விலையில்லா மிதிவண்டி கொடுக்கும் நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எம்எல்ஏ கோவிந்தசாமிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது


 அதேபோல மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் உண்ணாமலை குணசேகரன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியச் பெருந்தலைவர்


 இவர் தலைமையில் விலையில்லா மிதி வண்டியை கொடுத்தால் என்ன? அவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருந்தலைவர் தான் வாருங்கள் நாங்களும் அரசியல் நடத்துவோம் என்று பள்ளிக்கு ச் சென்று விலையில்லா மிதி வண்டியை நிகழ்ச்சியை இவர்களே ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் திமுக மக்கள் பிரதிநிதிகள் கட்சியினர் புடை சூழ நிகழ்ச்சியை வெற்றிகரமாக எம்எல்ஏ வருவதற்குள் முடித்துவிட்டு வந்துவிட்டனர்


 சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி நிகழ்ச்சிக்கு வந்தபோது அங்கு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாமல் எல்லாம் முடிந்தது என்ற நிலையில் இருந்தது 

இதைக் கண்டு அதிர்ச்சியும் கோபமும் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி  பள்ளி ஆசிரியர்களிடம் காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டார், ஏமாற்றத்தையும் சந்தித்தார்

 இது குறித்து திமுகவினரிடம் கேட்டபோது

 ஒன்றிய சேர்மன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பகுதி கவுன்சிலர்கள் உடன் இருந்துள்ளனர், எனவே எங்களது முதல்வர் வழங்கும் விலையில்லா மிதிவண்டி நிகழ்ச்சிகளை நாங்கள் கொடுக்க வேண்டாம் என்பதெல்லாம் சட்டம் இல்லை, எங்களது ஒன்றிய செயலாளர் ஆலோசனையில் இது போன்று தொடர்ந்து மக்கள் நல திட்டங்களை முன் நின்று நாங்களே செய்வோம், நாங்களும் மக்கள் பிரதிநிதி தான், சட்டமன்ற உறுப்பினர் மாநில நிர்வாகத்தை பார்த்துக் கொள்ளட்டும், மாவட்ட உள்ளாட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
 எல்லாம் எங்களது ஒன்றிய செயலாளருக்கு தெரியும் ,அவரது ஆலோசனையின் படி நாங்கள் இனிமேல் எங்களது முதல்வரை அவமதிக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமிக்கு டப் கொடுப்போம் என்று முடித்துக் கொண்டனர்

Comments