தருமபுரி அறங்காவலர் மாவட்டத் தலைவர் கவுதமனின் நெருங்கிய நண்பரின் மனைவிக்கு கோவில் தர்மகர்த்தா பதவிக்கு ஓகே ஓகே ஊர் கூடி தேர்ந்தெடுத்த கணேசனுக்கு அசிங்கமும் அவமானமும் ஆத்திரத்தில் கானாபட்டி ஊர் பொது மக்கள் - நடவடிக்கையில் இறங்கும் அமைச்சர் சேகர் பாபு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலவாடி ஊராட்சியில் 15 கிராம மக்கள் தேர்ந்தெடுத்த அறங்காவலர் குழு தர்மகர்த்தா நியமிக்காமல் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தனக்கு வேண்டியவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தன்னிச்சையாக அறங்காவலர் குழு தர்மகர்த்தாவை தேர்ந்தெடுத்ததிற்க்கு பாலவாடி ஊராட்சியை சேர்ந்த 15 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கானாபட்டி கிராமத்தில் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலவாடி, ஊராட்சியில் பால்வாடி, கருப்பனள்ளி, கூரம்பட்டி, ஓ ஜி அள்ளி, வைரவன் கொட்டாய், கானா பட்டி உள்ளிட்ட பதினைந்து கிராமங்களை சேர்ந்த ஊர் கவுண்டர்கள் ஒன்றிணைந்து அறங்காவலர் குழு தர்மகர்த்தா கணேசன் என்பவரை ஒருமனதாக தேர்ந்தெடுத்து தர்மபுரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கௌதமன் இடம் வழங்கினோம்.
கணேசனுக்கு வழங்காமல் அவருக்கு வேண்டிய பாலவாடி பகுதியைச் சேர்ந்த காளி மனைவி விஜயா விடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கிராம அறங்காவலர் குழு தர்மகர்த்தாவாக நியமித்து உள்ளனர்.
இதனை கண்டிக்கும் வகையில் பாலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 15 கிராம மக்கள் மற்றும் ஊர் கவுண்டர்கள் ஒன்றிணைந்து பாலவாடி ஊராட்சி மக்களின் பரிந்துரையை ரத்து செய்து பணத்திற்கு விலை போன தர்மபுரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கௌதமன் கண்டித்தும் ஊர் பொதுமக்கள் கானாபட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் 15 கிராம மக்களின் கோரிக்கைகளை ஏற்காமல் காளி மனைவி விஜயா அறங்காவலர் குழு பதவியில் தொடர்ந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம் என்றனர். இது பற்றி இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு இந்த சம்பவம் தெரிய வர உடனடியாக இது குறித்து கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment