அரூர் அடுத்த எச்.புதுப்பட்டியில் விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி அமைப்பதற்கான கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலையிலான அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
அரூர் அடுத்த எச்.புதுப்பட்டியில் விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி அமைப்பதற்கான கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலையிலான அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
சேலம் அயோத்திப்பட்டினம் முதல் வாணியம்பாடி வரை இருந்த இருவழி நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து 4 வழி தேசிய நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்ய கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. முதல்கட்ட பணிக்கு ரூ.293 கோடியிலும், 2-ம் கட்ட பணிக்கு ரூ.190 கோடியிலும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டன.
தமிழக அரசும் மத்திய அரசும் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து சுமார் 60% பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் அரூர் அடுத்த எச்.புதுப்பட்டி பகுதியில் தற்போது சுங்கச்சாவடி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆட்சி காலத்தில் கட்டணங்களை செலுத்தி வாகனங்கள் செல்லும் வகையில்திட்டமிடப்பட்டது ஆனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் விவசாயிகளின் நலன் கருதி சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிடப்பட்டன. ஆனால் தற்போது திமுக ஆட்சி காலத்தில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி இப்பகுதியில் சுங்கச்சாவடி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன
இதனை கண்டிக்கும் வகையிலும் இந்த சுங்க சாவடியை அமைப்பதற்கான கட்டுமான பணிகளை நிறுத்த கோரியும் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தலைமையில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று வேலைப்பணிகளை நிறுத்தி வைக்கப்பட்டனர். மேலும் இப்பகுதியில் அபகரிக்கப்பட்ட விவசாய நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும் முழுமையாக இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தெரிவித்தார்.
மேலும் செயற்பொறியாளர்களை அழைத்து கட்டுமான பணிகளை நிறுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் முற்றிலுமாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி சம்பத்குமார் உள்ளிட்ட அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment