சம்பந்தம் இல்லாத துறை அதிகாரிகள் மீது ஆதாரம்மின்றி வதந்திகளாக வளம் வரும் செய்திகள்..!! தருமபுரி மாவட்ட ஆட்சியர் களத்தில் இறங்க பாப்பிரெட்டிப்பட்டி வருவாய்த்துறை அலுவலர்கள் எதிர்பார்ப்பு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு சில அதிகாரிகள் தங்களுடைய ஆதாயத்திற்காக தனக்கு சாதகமான செய்தியாளர்களிடம் பழகி அலுவலகத்தில் உள்ள துறை சம்பந்தப்பட்ட தகவல்களை கசியவிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக நேற்று வாட்ஸ்அப் குழுவில் மட்டும் வளம் வந்த பாப்பிரெட்டிப்பட்டி துணை தாசில்தார் பழனிச்சாமி அவர்களிடம் நிலம் சம்பந்தமாக மக்கள் வந்தால் மரியாதை இல்லாமல் நடப்பதாகவும், மனுக்கள் கொடுத்தால் அதை சாக்கு போக்கு சொல்லி தட்டி களிப்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து டெபுட்டி தாசில்தார் பழனிச்சாமி அவர்களிடம் கேட்கும்போது சார் எனக்கும் சர்வேயர் துறைக்கும் சம்பந்தம் இல்லை அது மட்டுமின்றி மக்கள் என்னிடம் மட்டுமே மனு கொடுப்பதில்லை, நான் லஞ்சம் வாங்குவதாகவும் வசூல் வேட்டை ராஜாவாகவும் பணி செய்கிறேன் என்று பொய் செய்திகள் வருவது வேதனை அளிக்கிறது.
ஒரு வேளை நான் ஒரு நபரிடம் லஞ்சம் வாங்கியது போல, ஒருவரிடம் லஞ்சம் கேட்பது போலவும் ஆதாரம் வைத்து செய்திகள் வெளியிட்டால் நியாமாக இருக்கும் குறிப்பிட்டு அடிக்கடி என்னை மட்டும் ஏன் பொய்யான தகவல்களை பரப்பி செய்தி போட்டு வருகின்றனர்.காரணம் என்ன தெரியுமா நில அலவையர் பிரிவில் உள்ள ஒரு நபருக்கு மகளிருக்கான 1000 ரூபாய் தொகை வழங்கும் திட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் பணி மாற்றம் செய்துள்ளார்.
இதனால் சம்பந்தபட்ட அந்த நபர் என்னிடம் வாக்கு வாதம் செய்து சண்டையிட்டார். அந்த பணி மாறுதலுக்கு எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிவிட்டேன்.
அதை மீறி என்னை பழி வாங்கும் நோக்கத்திற்காக இப்படி தவறுதலாக செய்தி போட அவர் உடந்தையாக இருப்பது எங்களுடைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
செய்தியாளர் : உங்களிடம் சண்டையிட்ட அலுவலர் பெயர் ?
துணை வட்டாட்சியர் பழனிச்சாமி : நான் கூறமாட்டேன் இது அரசு நிர்வாக சம்பந்தப்பட்டது. அப்படி ஒருவரின் பெயரை வெளியில் சொல்ல கூடாது, தற்போதைய மரியாதைக்குறிய மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் கண்டிப்பாக இது குறித்து ஆய்வு செய்வார் என்று எதிர்பார்க்கிறோம், அந்த ஆய்வில் யார் மக்களை அவமதிப்பு செய்கிறோம், எத்தனை பேரிடம் நான் வசூல் ராஜாவாக இருந்துள்ளேன் என்று என் மீது வதந்தி பரப்பிய நபர் உறுதி படுத்துவார், இல்லை என்றால் சட்டபடி என்ன செய்யவேண்டும் என்பது அரசு அதிகாரிகளுக்கு தெரியும் என்றார்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆய்வில் இறங்குவாரா பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் சண்டையிட்ட நபர் யார் என்று விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பாரா ? எதிர்பார்ப்பில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள்.......
Comments
Post a Comment