மதுபானக்கடை வேண்டும் என கோரி இன்று போராட்டம் என்று பரவிய போஸ்ட்டரால் - மதுபானக்கடை வேண்டாம் என போராட்டத்தில் இறங்கிய பெண்கள்... தருமபுரியில் நடந்த சம்பவம்... வாக்கு வாதத்தில் முடிந்த ஆர்பாட்டம்

மதுபானக்கடை வேண்டும் என கோரி இன்று போராட்டம் என்று பரவிய போஸ்ட்டரால் - மதுபானக்கடை வேண்டாம் என போராட்டத்தில் இறங்கிய பெண்கள்... தருமபுரியில் நடந்த சம்பவம்... வாக்கு வாதத்தில் முடிந்த ஆர்பாட்டம்

தருமபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் தொடர்ச்சியாக பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைகோட்டையும் ஒரு வரலாறு கொண்ட பகுதியாகும். இந்த கோவிலில் சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு கட்ட பட்ட சிவன் கோவில்களும் சிறப்பு வாய்ந்த வரலாற்று சின்னங்களும் உண்டு என கூறப்படுகிறது. இந்த பகுதியில் ஆன்மிகம் சார்ந்த நிகழ்வுகள் அதிகளவில் காணப்படுகின்றன.இதனால் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்வதும் குறிப்பாக பால் விற்பனை செய்வதம் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

மாலை நேரங்களிலும் விடியர் காலையிலும் பால் விற்பனை செய்ய பெண்கள் ஏற்கனவே இருந்த மதுபானக்கடை வழியாகத்தான் வரவேண்டும், அப்போது சாராயம் குடிக்கும் நபர்களால் பெண்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் எப்படி பாதுகாப்பு இருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

குடிநீர், இல்லை, ஏரி வேலை இல்லை என்று சொன்னால் எந்த அரசு அதிகாரிகளும், எந்த அரசாங்கமும் வருவதில்லை, ஆனால் இந்த மதுபானக்கடை திறக்க மட்டும் இவங்க ஓகே சொன்னா எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்புகின்றனர். 
இங்கே மதுபானக்கடை வந்தால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும், இதனை உணராமல் ஒயின் ஷாப்பை திறந்தால் உடைத்து தள்ளுவோம் அப்போது யாரும் கேட்க கூடாது என்று ஆவேசமாக பேசினார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்..
இது ஒரு பக்கம் நடக்க.. திடீரென்று நீ எப்படி எங்க ஊரு பெண்களை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வைக்கலாம் நீ பேசாம உங்க ஊரு பெண்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தலாமே என்று தென்கரைக்கோட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்த மது பிரியர் ஆவேசமாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மதுக்கடை வேண்டாம் என்று போராட்டம் நடத்தியவர்கள் அவரை விரட்டி அடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் கூட்டம் சாலையில் நின்றதால் பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர் மளிகை கடை, டீ கடை, துணிக்கடை யில் உள்ள மக்களை அனைவரையும் வீட்டுக்கு துறத்தினர். 

பொறுத்து பொறுத்து பார்த்த மது பிரியர்கள் செய்தியாளர்களை கண்டு சார் நீங்க இங்க வாங்க சார் எங்களுக்கு ஒயின் வேணும் சார், எங்களால குடிக்காம இருக்க முடியாது. இங்க இருக்க சந்துகடயில பாட்லுக்கு 70 ரூபா எக்ஸ்றா விக்கிறாங்க இதனால எல்லோரும் கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மெனசி 
பாப்பிரெட்டிப்பட்டி, போய்தான் குடித்து விட்டோ வருகிறார்கள் சில வரும் வழியிலேயே வாகன விபத்தில் இறந்தும் போகிறார்கள். இதனால்தான் நாங்க எங்க பகுதியில ஒயின் ஷாப்ப திறக்க சொல்றோம், கவர்ன்மென்ட் பாவுங்க கவர்ன்மென்டே ரொம்ப கஷ்டத்தில் ஓடிட்டு இருக்கு ஒரு முட்ட பணியாரம் சுட்டு கூடு ஒரு கிழவி போலச்சிக்கோம் கவர்ன்மென்ட் பாவுங்க என்று அரசுக்கே இறக்கம் காட்டி பேசினார் அந்த மதுப் பிரியர் என்னதான் ஒரு பக்கம் மது வேண்டாம் என்று சொன்னாலும் மதுவுக்காக இப்படி வசனம் பேசி நாட்டுக்காக இறக்கப்பட்டு தன்னையும் இழக்கின்ற இந்த தருமபுரி மக்கள் வேலையின்றி தவிக்கும் சூழலில் வாழ்ந்து வருவதை கண்டு எப்போது அரசு இறக்கம் காட்டும் என் அப்பகுதி இளைஞர்கள் ஆதாங்கத்துடன் கேள்வி எழுப்பினர்.



Comments