திமுகவின் அடிமட்ட தொண்டனை கூட ஒரு போதும் ஏமாற்ற முடியாது தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன்
திமுகவின் அடிமட்ட தொண்டனை கூட ஒரு போதும் ஏமாற்ற முடியாது காரணம் இப்போது அவர்கள் நன்றாகவே தெரிந்து கொண்டனர் '' பழனியப்பனும் திமுகதான்'' அவரும் (கருப்பு சிவப்புதான் ) அவரை பற்றி தவறாக சித்தரித்தால் திமுகவின் கழகத்திற்குதான் அவபெயர் அதனால் பழனியப்பனுடன் ஒன்று திரள்வோம் என்று கூடிதான் எந்த ஒரு கூட்டம் நடந்தாலும் திமுக தோழர்கள் தவறாமல் கலந்து கொள்கின்றனர்.
டீ கடைகளில் செய்தித்தாள்கள் வருகிறதோ இல்லையோ அதற்கு முன்பு பரபரப்பான செய்தியாக பழனியப்பனின் செயல்பாடு பற்றி தான் பேசி வருவதாக செய்திகள் வலம் வருகிறது இது போன்ற விமர்சனங்களையும் கேளிக்கை கூத்துகளையும் இனிமேல் நமது கழகத் தொண்டர்களை பார்த்துக் கொள்வார்கள் இனி விமர்சனத்தை பற்றி ஒருபோதும் கவலைப்பட போவதில்லை நான் திமுகவில் இணையும்போது ஒட்டுமொத்த திமுக தொண்டர்களின் முன்னிலையில் மேடையில் நிறுத்தி தளபதி சொன்ன ஒரே வார்த்தை பழனியப்பன் வந்துவிட்டார்.
இனி தர்மபுரியை பற்றி எனக்கு கவலை இல்லை இனிமே தர்மபுரி திமுக கோட்டையாக மாறும் என்று நம்பிக்கை வைத்தார். தளபதியின் நம்பிக்கையே எனது இலக்கு நிச்சயமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி திமுக கோட்டையாக மாறும் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை எங்களுடைய திமுக தொண்டர்களுக்குள் நடக்கும் விமர்சனங்கள் அண்ணன் தம்பிக்குள் நடப்பது போல அதனால் மற்றவர்கள் புத்தி சொல்லி அறிவை வளர்த்து கற்றுக்கொள்ளும் கட்சி திமுக கிடையாது என்பது எனக்கு ஆரம்பகால கட்டத்திலேயே தெரியும்.
காரணம் சாதாரண வார்டு உறுப்பினருக்கு கூட பிரதமர் அளவிற்கு பேசக்கூடிய தகுதிகள் உடையவர்கள் திமுக கட்சியில் உண்டு அந்த கட்சியில் இருக்கும் மாவட்ட செயலாளர் ஆக நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் நன்றாக கற்று கொண்டு வருகிறேன் எதிரிகளாலும் சமூகத்தாலும் இனி வரும் காலங்களில் வெற்றி பயணத்தை தொடர்வோம் கழகத் தொண்டர்களோடு....
என்று ஆணித்தரமான நம்பிக்கையை விதைத்தார் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் பொறுத்திருந்து பார்ப்போம் தளபதியின் நம்பிக்கை காப்பாற்றுவாரா …! என்று…??
Comments
Post a Comment