10 லட்சம் கொடுத்தால் 13 லட்சம் - ஏமாந்து போன பாப்பிரெட்டிப்பட்டி டிராவல்ஸ் உரிமையாளர் சுரேஷ் - மோசடி கும்பலை l - அசரவைத்த அதியமான் காவல் நிலையம்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேவுள்ள ராமியம்பட்டி கிராமத்தை சேர்ந்த டிராவல்ஸ் தொழில் நடத்தி வரும் சுரேஷ் (32) என்பவரிடம் பென்னாகரம் அருகேவுள்ள சீலநாய்க்கனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ( 38) கோபாலாம்பட்டி நடூரை சேர்ந்த ராஜேந்திரன் (44) காளியம்மன் கோவில் பஸ் ஸ்டாப் கோட்டுப்பட்டி சேர்ந்த செல்வராஜ் (35) ஆகிய மூன்று பேர் மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நடுப்பட்டியை சேர்ந்த ஹரிபாபு (38) ஆகிய நான்கு பேரும் சுரேஷிடம் அதிமுக முன்னாள் அமைச்சரின் பணம் கோடி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டாக இருப்பாதாகவும் அந்த பணத்தினை மாற்றி வருவதாகவும் 10 லட்ச 500 ரூபாய் நோட்டாக கொடுத்தால் அதற்கு 2 ஆயிரம் ரூாய் நோட்டுக்களாக 13 லட்ச ரூபாய் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்பவைத்து இதனை முழுமையாக நம்ப வேண்டும் என்பதற்காக அட்டை பெட்டிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருக்கும் வீடியோவை சுரேஷ்வுக்கு அனுப்பி உள்ளனர்.
அந்த வீடியோவை பார்த்த சுரேஷ் நம்பி அவர்கள் சொல்வதற்கு ஏற்ப நடந்து கொண்டார் நான்கு பெரும் சுரேஷை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்ட நான்கு பேரும் சுரேஷிடம் 13 லட்ச ரூபாய் பணம் இருப்பதாக கூறி பணக்கட்டுகளை போல வெறும் காகிதங்களை ஒரு பையில் பண்டலாக கட்டி கொடுத்து சுரேஷின் கவனத்தை திசை திருப்பி நூதனமாக ஏமாற்றியது தெரிய வந்திருக்கிறது.
இதனை தொடர்ந்தே பாதிக்கப்பட்ட சுரேஷ் போலியாக கொடுத்த பண கட்டுகளை கொண்டு வந்து அதியமான் கோட்டை காவல்துறையிடம் புகார் அளித்தார் அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், செல்வராஜ், ஹரிபாபு ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்றத்தை ஒப்பு கொண்டனர்.
அவர்களிடமிருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை மீட்டனர். நான்கு பேர் மீது 420 சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்
Comments
Post a Comment