பார்க்க கூட வருவதில்லை-இனி இந்த கட்சியில் இருந்து என்ன பயன்?- பாஜாகவில் இருந்து விலகிய பேரூராட்சித் தலைவர்!
பார்க்க கூட வருவதில்லை-இனி இந்த கட்சியில் இருந்து என்ன பயன்?- பாஜாகவில் இருந்து விலகிய பேரூராட்சித் தலைவர்!
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் வட்டம் ருத்ராவதி பேரூராட்சித் தலைவராக உள்ளவர் கண்ணம்மாள். கடந்த முறை நடைபெற்ற சட்டப் பேரவை உறுப்பினர் தேர்தலில் ருத்ராவதி பாஜவுக்கு ருத்ராவதியில் அதிகப்படியான வாக்குகள் கிடைத்தன.
இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நீண்ட நாள்களாகியும் வராததைக் கண்டித்து ருத்ராவதி பேரூராட்சித் தலைவர் கண்ணம்மாள் தலைமையில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 5,000-த்துக்கும் அதிகப்படியான வாக்குகளை பாஜகவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம்.
இந்தப் பேரூராட்சியில் பாஜகவைச் சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆனால், கட்சித் தலைமை இதுவரை எங்களை கண்டுகொள்ளவில்லை. அதனால், தாராபுரம் வட்டம் ருத்ராவதி பேரூராட்சித் தலைவர் பாஜகவைச் சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முதலாவது பேரூராட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ள 4000_க்கும் மேற்பட்டோர் வேறு கட்சியில் இணையுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பேட்டி :
1.திருமதி: கண்ணம்மாள்
ருத்ராவதி பேரூராட்சி தலைவர்
2. திருமதி ராதா ருத்ராவதி பேரூராட்சி உறுப்பினர்
Comments
Post a Comment