தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற கோரி முதல்வரிடம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தார்.


மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க தருமபுரி மாவட்டத்திற்கு வருகைத் தந்த தமிழக முதல்வரிடம் தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற கோரி தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தார். 


தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர் ஆதாரமான காவிரி ஆறு தருமபுரி மாவட்டத்தின் வழியாகத் தான் தமிழகத்திற்குள் நுழைகிறது என்றாலும் கூட, தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே வாடுகிறது. தருமபுரி மாவட்டம் விவசாயத்துக்காக மழையையே நம்பியுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் முதன்மைத் தொழிலும், வாழ்வாதாரமும் விவசாயம் தான் தருமபுரி மாவட்ட மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இவைகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. காவிரி ஆற்றில் ஒகேனக்கல் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை நீரேற்றும் மின் மோட்டார்கள் மூலம் இறைத்து, குழாய்கள் மூலம் கொண்டு சென்று தருமபுரி  மாவட்டத்தில்  உள்ள  நீர்நிலைகளில்  நிரப்புவதற்கான,   ‘‘தருமபுரி மாவட்ட காவிரி  உபரிநீர்  பாசனத்  திட்டத்தை’’ செயல்படுத்தலாம்

Comments