அரூர் அருகே 100 நாள் வேலை செய்யும் பெண்கள் சுமார் 150-ம் மேற்பட்டோர் அரூர் - சேலம் நான்கு வழி சாலையில் திடீர் சாலை மறியல் - பஞ்சாயத் தலைவரை பாதிக்கப்பட்டவர் அடிக்க முற்பட்டதால் பரபரப்பு.

அரூர் அருகே 100 நாள் வேலை செய்யும் பெண்கள் சுமார் 150-ம் மேற்பட்டோர் அரூர் - சேலம் நான்கு வழி சாலையில் திடீர் சாலை மறியல் - பஞ்சாயத் தலைவரை பாதிக்கப்பட்டவர் அடிக்க முற்பட்டதால் பரபரப்பு.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த
தொட்டம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாச்சனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 150-ம் மேற்பட்ட பெண்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக 100 ரூபாய் சம்பளத்தொகையாக போட்டுள்ளதால் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திடீரென இன்று

அரூர் - சேலம் நான்கு வழிச்சாலையில் ஏரி வேலை செய்யும் 150-ம் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை அறிந்த தொட்டம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜமாணிக்கம் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் பேசுகையில் திடீரென 100 நாள் வேலை செய்யும் நபர் ஒருவர் பஞ்சாயத்து தலைவர் இடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிக்க முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த சாலை மறியலில் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளது.

Comments