திருச்சியில் கிரிக்கெட் விளையாடிய பள்ளிகளைத் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்..

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திருச்சி மாநகர திமுக  செயலாளர்
 மு. மதிவாணன் தலைமையில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். 
இந்த கிரிக்கெட் போட்டி 26, 27, 28, 29, ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது .மேலும்  போட்டியில் முதல் பரிசு ரூ50,000 இரண்டாம் பரிசு ரூ 25,000 மூன்றாம் பரிசு ரூ10,000 நான்காம் பரிசு ரூ5000 சிறந்த தொடர் நாயகன் பரிசு ரூ 3000 இறுதி போட்டிக்கு சிறந்த வீரருக்கான பரிசு ரூ 2000 ஆகியவை அளிக்கப்படுகிறது.
திருச்சி கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட அனைத்து 65 வார்டுகளின் சார்பாகவும் தலா ஒரு அணி  போட்டியில் பங்கு கொள்கிறது. போட்டியின் தொடக்க நிகழ்வில்   மாநில நிர்வாகி செந்தில்  மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள்  செங்குட்டுவன்  லிலாவேலு மூக்கன்  கார்த்தி   மாநகரக் கழக நிர்வாகிகள் சந்திரமோகன் 
 பொன்செல்லையா  சரோஜினி பகுதி கழகச் செயலாளர்கள் மோகன்  நீலமேகம் ராஜ்முஹம்மது , மணிவேல் சிவக்குமார் மற்றும் மாவட்டக்கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கிரிக்கெட் போட்டியின் அணிகளை  சார்ந்த வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Comments