எடப்பாடி அண்ணன் காலுக்கு கீழ ஸ்டாலின் ஃபோட்டோ போடணுமா கிண்டல் செய்த அரூர் சட்டமன்ற உறு்பினர் சம்பத்குமார்

தர்மபுரி மாவட்டம் அரூர் டி என் சி திரையரங்கின் அருகிலுள்ள இடத்தில் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஜூன் 22 ஆம் தேதி  நடைபெற்றது. இந்த நூலக கட்டிடம் கட்டுவதற்கான நிதி அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்களின் நிதியில் இருந்து இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு முன்னால் உயர் கல்வித் துறை அமைச்சர் கே பி அன்பழகன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புகைப்படம் இடம்பெற்ற விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டது. இந்த விளம்பர பேனர்கள் வைப்பதற்கான அனுமதி காவல்துறையில் பெறவில்லை என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது பிறகு அரூர் திமுக தொண்டர்கள் ஏன் இந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கான விளம்பர பேனரில் முதல்வரின் புகைப்படம் இடம்பெறவில்லை ? உங்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு கொடுக்கப்படுகின்ற நிதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கொடுக்கும் நிதி என்று உங்களுக்கு தெரியாதா அவர் தற்போது உள்ளே முதல்வர் அவரின் புகைப்படத்தை ஏன் நீங்கள் விளம்பர பேனரில் வைக்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அப்போது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் அவர்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது அதற்கு முன்னதாகவே அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் பிறகு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அவர்கள் பூமி பூஜை எடுத்து இருக்கு வருகை தந்தனர் கூட்டமாக இருப்பதை பார்த்து சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அவர்கள் என்ன இது கூட்டமாக இருக்கிறது. திமுக காரர்கள் எல்லாம் எதுக்கு இருக்காங்க என்று கேட்டார் அப்போது அருகில் இருந்த அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்கள்  எடப்பாடி அண்ணனுக்கு  காலுக்கு கீழே ஸ்டாலின் போட்டோ போடணுமா அப்படி என்று கிண்டல் அடித்து பேசியது அப்பகுதியில் கலகலப்பு ஏற்படுத்தியது.. இது அதிமுக தொண்டர்களிடையே கலகலப்பு ஏற்படுத்தினாலும் ஒரு வேலை திமுக தொண்டர்கள் இது கேட்டிருந்தால் அங்கே ஒரு பரபரப்பு ஏற்பட்டிருக்கும்.

Comments