தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவுத்துறை அலுவலராக பணியாற்றி வந்த இந்திரா அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அதுமட்டுமின்றி அவர்கள் போலி பட்டா பதிவு செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து அதிகாரிகளின் ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை ஆதாரப்பூர்வமாக செய்தி நிறுவனங்களுக்கு அவர்கள் செய்த ஆய்வு அறிக்கை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் தமிழக முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த முறைகேடான பணி சம்பந்தமாக தற்பொழுது தமிழக முழுவதும் பத்திர பதிவுத்துறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பல வருடங்களாக பல ஆண்டுகளாக பாப்பிரெட்டிப்பட்டி பத்திர எழுத்தாளர் லஞ்சம் வாங்குகிறார் என்று பல்வேறு விவசாயிகள் குரல் எழுப்பியும் தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத போது தற்பொழுது கடந்த 8 மாதங்களாக பாப்பிரெட்டிப்பட்டி பத்திர பதிவுவாளர் இந்திரா மீது செய்திகள் வந்த மையமாக இருந்தது நிலையில்
பாப்பிரெட்டிப்பட்டி பத்திரப்பதிவு அலுவலர் இந்திரா அவர்கள் புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அவர் வருகின்ற திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பணி மாறுதல் உறுதியாக இருக்கும் என அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்...
இந்த நடவடிக்கைகளில் எவிடன்ஸ் பார்வை செய்தி நிறுவனம் ஆதாரபூர்வமாக வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment