தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கான டயாலிசிஸ் பிரிவு.கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கான டயாலிசிஸ் பிரிவு.
கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கடந்த 2008 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக ரூபாய் 100 கோடி மதிப்பில் 816 படுக்கைகள் கொண்ட ஐந்து மாடி கட்டிடத்துடன் தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது 1230 உள் நோயாளிகளுக்கு படுக்கைகள் உள்ளன. இங்கு 16 அறுவை சிகிச்சை அரங்குகள், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அவசர சிகிச்சை, கண், மகப்பேறு, பல், இருதயம், நுரையீரல் என 27 துறைகள் உள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கண் வங்கியும் துவங்கப்பட்டுள்ளது.
தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தற்போது ரூபாய் 175 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி அமைக்கப்பட ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில்,
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்
ஹெபடைட்டிஸ் நோயாளிகளுக்கான பிரத்தியேகமான புதிய டயாலிசிஸ்
பிரிவை கல்லூரி முதல்வர் டாக்டர் அமுதவல்லி அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார்.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் சுமார் 55 சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகள் சுழற்சி முறையில் ஒரு மாதத்திற்கு 500 சுழற்சிகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். தற்போது ஹெபடைட்டிஸ் (சி) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான டயாலிசிஸ் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் மரு.சிவகுமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு.காந்தி, மருத்துவத்துறை பேராசிரியர் மரு.கலைச்செழியன், மரு.சந்திரசேகர், மரு.குமார் ராஜா, மரு.ஆனந்தி, மரு.சசிகுமார், மரு.சுரேஷ் குமார், மரு.கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment