தருமபுரி மெணசி கிராம அலுவலரை இன்று கொன்றுவிடுவோம் கூட்டனி திட்டம்போட்ட கனிமவள கொள்ளைகும்பல் பின்னணியில் பஞ்சாயத்து தலைவர்கள்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிராம நிர்வாக அதிகாரியை நள்ளிரவில் கொல்ல முயற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பட்டப் பகலில் கனிம வளம் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்த சம்பவம் நடந்த சில தினங்களிலேயே தர்மபுரி மாவட்டத்திலும் கனிம வள கொள்ளையை தடுக்கு முயற்சித்த கிராம நிர்வாக அதிகாரியை நள்ளிரவில் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இளங்கோ இளம் வயதுடைய இவர் துணிச்சலானவர்
இவர் அரூர் அருகே உள்ள எட்டுப்பட்டி அழகிரி நகர் அக்ரஹாரம் பகுதியை சார்ந்தவர்
இவர் நேற்று இரவு 1.05. 2023 அன்று இரவு மெணசி பகுதியில் கனிமவளக் கொள்ளை திருடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது
அந்த நேரத்திலும் தனது கடமையை நேர்மையுடன் செயல்படுத்த மழை பெய்து கொண்டிருந்த போதும் கனிம வளக் கொள்ளை கும்பலை கையும் காலமாக பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் விரைந்தார்
அப்போது குண்டல மடுவு காளியம்மன் கோவில் அருகில் உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றது, அவற்றை தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி முயற்சித்த போது அந்த டிராக்டர் நிக்காமல் இவர் மீது ஏற்றிக் கொள்ளும் வகையில் வேகமாகச் சென்றது
அதிர்ச்சியடைந்த இவர் அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சிக்காமல் ஓடித் தப்பித்துள்ளார், இதனால் பெரும் அதிர்ச்சியும் பயமும் கொண்ட கிராம நிர்வாக அதிகாரி இந்த வாகனம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்ததில் மெணசி பகுதியை சார்ந்த ராகவன் அப்பா பெயர் முனுசாமி என்றும் டிராக்டர் எண் TN 29 டி TZ 2538 எனவும் தெரியவந்துள்ளது
இந்த நபர் சொந்தமாக ஜேசிபி இயந்திரம் கொண்டு தனிமவள கொலைகளை திருடி தனது டிராக்டர் மூலமாக விற்பனை செய்து வந்ததும் கிராம நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு வந்துள்ளது
இந்த கும்பலுக்கு மெனசி ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, பூத நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், துணைத் தலைவர் பெருமாள் ஆகியோர் உதவியாக இருப்பதாகவும் தெரிய வருகிறது
இந்த கும்பலிடம் இருந்து தற்போது கிராம நிர்வாக அதிகாரிக்கு மிரட்டல்கள் வர துவங்கியுள்ளது
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி தெரிவிக்கையில் தான் இந்த பகுதியில் நேர்மையாக பணியாற்றி வருவதாகவும், பட்டியல் இன சார்ந்தவர் என்பதால் தனக்கு இந்த கும்பல் பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருவதாகவும், இதற்கு உடந்தையாக மெணசி பஞ்சாயத்து தலைவர்களும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் ஒன்று சேர்ந்து எவன் வந்தாலும் ஏத்தி கொள்ளுடா என சத்தம் போட்டுள்ளனர். இதனையடுத்து இடையூறாக இருந்த கிராம அலுவலர் இளங்கோவையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து தனது உயர் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு புகார் தெரிவித்துள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து காவல்துறையில் உரிய ஆவணங்களுடன் புகார் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
நேர்மையாகவும், திறமையாகவும், கனிமவள கொள்ளைக்கு இடையூறாக செயல்படும் கிராம நிர்வாக அதிகாரிகளை தேடிப்பிடித்து கனிமவள கொள்ளை கும்பல் கொலை செய்ய முயற்சிக்கும் சம்பவம்
தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்து கனிம வளம் அதிகம் உள்ள தர்மபுரி மாவட்டத்திலும் கொலை முயற்சிகள் அரங்கேற இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மாவட்ட நிர்வாகம் கனிமவள கொள்ளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்
தேசசொத்துக்களை கொள்ளையடிக்கும் இந்த கும்பல்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை முயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
நேர்மையாக செயல்படும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Comments
Post a Comment