400 ரூபாய் மதிப்புள்ள சாராய ஊறல் வைத்திருந்தவர், பணை கள் இறக்கியவர் பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் தற்போது கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் அடுத்தடுத்து பலியாகினர். இன்னும் பலபேர் தீவிர சிகச்சைப்பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் வைத்திருக்கும் நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்ட நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதகளில் காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதி அவர்களின் தலைமையில் ரகசிய தகவ்களின்படி மெணசியில் பணைக்கள் இறக்கிய சிரிதர் வயது 49 மற்றும் மோட்டுபட்டி பகுதியில் 400 ரூபாய் மதிப்புள்ள சாராய ஊறல் வைத்திருந்த குமரேசன் 62 வயது ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment