சேலம் டூ சென்னை - ஓடும் இரயிலில் போலீஸ்காரர் மீது 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல், மண்டை உடைப்பு , ரயில் நிறுத்தப்பட்டதா ரவுடிகளின் களமாக மாறும் பொம்மிடி பேரூராட்சி

சேலம் ஓடும் இரயிலில் போலீஸ்காரர் மீது 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்,
 மண்டை உடைப்பு

தி.மு.க போரூராட்சி தலைவி மகன் தலைமையில் போலீசை புரட்டி எடுத்து கும்பல் வெறிச்செயல்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் பகுதியில் சேர்ந்தவர் ராஜவேலு தமிழ்நாடு போலீசாக உள்ளார்

 இவர் ரயில்வே பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு காவல் பணி செய்து வருகிறார்

 நேற்று வியாழக்கிழமை மாலை ஈரோட்டில் இருந்து பணியை முடித்து விட்டு சொந்த ஊரான தாளநத்தத்தில் தனது உறவினரின் இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜோலார்பேட்டை செல்லும் பாசஞ்சர் ரயிலில் வந்து கொண்டிருந்தார்


 அப்போது பொம்மிடி வினோபாஜி தெருவை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகன் வெங்கட் என்பவர் ரயிலில் பயணம் செய்த போலீஸ் காவலரிடம் அருகில் அமர முயற்சித்துள்ளார்

 அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றியுள்ளது


 இதனால் கோபம் கொண்ட வெங்கட் தனது செல்போன் மூலமாக பொம்மிடியில் உள்ள நண்பர்களுக்கு ரயிலில் ஒருவர் என்னிடம் சண்டையிட்டுள்ளார் அவரிடம் நான் சண்டையிட வேண்டும் எனக் கூறி ஆட்களை வரச் சொல்லி இருக்கிறார்


 இதன் பேரில் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த பேசஞ்சர் இரயில் பொம்மிடி இரயில் நிலையம் வந்தவுடன் 15 பேர் கொண்ட கும்பல் ரயிலில் ஏறி போலீஸ்காரர் ராஜவேலுவை சரமாரியாக தாக்கி அவரை ரயில் பெட்டியில் இருந்து கீழே இறக்கி பொதுமக்கள் முன்னிலையில் அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்குதல் தொடுத்துள்ளனர் இதில் சட்டை கிழிந்து ரத்தம் சொட்ட சொட்ட பிளாட்பாரத்தில் கிடந்தார்


 இதில் காயம் அடைந்த போலீஸ்காரர் ராஜவேலு இது குறித்து தனது குடும்பத்தினரிடமும் ரயில்வே போலீஸ்சிடமும் புகார் தெரிவித்து விட்டு உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்


 சம்பவம் குறித்து அறிந்த சேலம் ரயில்வே போலீசார் பொம்மிடி பகுதியை சார்ந்த வெங்கட் பொ,மல்லாபுரம் திமுக பேரூராட்சி தலைவி சாந்தி புஷ்பராஜ் இவரது மகன் உதயகுமார் ஆகியோரை விசாரணைக்காக ரயில்வே போலீஸ் சேலம் அழைத்துச் சென்றுள்ளனர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


 இந்த நிலையில் காவலர் மீது இந்த வெறி கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி அவருடைய சட்டையை கிழித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது

போலீசார் மீது தாக்குதல் தொடுத்த தி.மு.க போரூராட்சி தலைவி சாந்தி புஸ்பராஜ் மகன் உதயகுமார் போலீசாரால் பிடித்து செல்லப்பட்டுள்ளார் இவர் தமிழ்நாடு போலீசாக இருந்து ஒழங்கு நடவடிக்கையாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பயணிகள் இரயிலில் ஏறி பொதுமக்கள் முன்னிலையில் காவலர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Comments