வட்டிபோட்டு வாகன உரிமையாளர்களை கொள்ளையடிக்கும் SRI RAM பைனான்சை கண்டித்து மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்



ஒசூர்: மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக, வட்டிக்குமேல் வட்டிபோட்டு வாகன உரிமையாளர்களை கொள்ளையடிக்கும் SRI RAM பைனான்சின் அராஜகத்தை முறியடிப்போம்! என்ற தலைப்பில் இன்று (16.04.23)பாகலூர் சர்க்கிலில் காலை 11.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர்.ஜெயராமன் தலைமை தாங்கினார். 
கண்டன உரையாக மக்கள் அதிகாரத்தின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர். இரவிச்சந்திரன், தோழர் சொன்னப்பா. IyF மாவட்டத் தலைவர், திராவிட கழகத்தின் மாவட்டத் தலைவர் தோழர்.வனவேந்தன், வி.சி.க-வின் ஒசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் தோழர்.ராமச்சந்திரன், தமிழக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் சந்தோஷ், FlTU - சங்கத்தின் மாநில செயலாளர் தோழர்.சுந்திரம், மாவட்ட செயலாளர் மாதையன், மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர்.கோபிநாத் ஆகியோர் உரையாற்றினார்கள். இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர். இரா.சங்கர் நன்றியுரையாற்றினர்.

Comments