திருப்பூர் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் மது போதையில் திரைப்படம் பார்க்க வந்த இளைஞர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் - மதுபோதையில் வந்த இளைஞர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் - போலீசார் விசாரணை
திருப்பூர் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் மது போதையில் திரைப்படம் பார்க்க வந்த இளைஞர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் - மதுபோதையில் வந்த இளைஞர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் - போலீசார் விசாரண
ை
திருப்பூர் யூனியன் மில் சாலையில் 8 ஸ்கிரீன் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கில் இன்று மதியம் சிம்பு நடிப்பில் வெளியான பத்துதல திரைப்படத்தை பார்க்க இளைஞர்கள் சென்றுள்ளனர். அவர்கள் மது போதையில் இருந்ததால் திரையரங்க விதிமுறைகளின் படி மது போதையில் இருப்பவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திரையரங்க ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் மீறி இளைஞர்கள் தங்கள் கட்டிய பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் திரையரங்கு ஊழியர்கள் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதாக அவரது நண்பர்கள் தொடர்ந்து திரையரங்கு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர் இரு தரப்பினரையும் வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment