நிலச்சுரண்டல் வர்கத்த்திற்கு ஏலம் போனதா கொரட்டூர் காவல் நிலையம் - ? மனுவை தூக்கி எறிந்த சம்பவம் வேதனையில் தவிக்கும் குடும்பம்
சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் 29-03-2023 அன்று மாலை 6:15 மணிக்கு கலைவாணர் நகர் சித்தர் தெருவைச்சேர்ந்த சண்முகம் 63- மற்றும் அவரது மகள் வைரம் 29 என்பவர் தன்னுடைய வீட்டிற்கு அருகாமையில் உள்ள ( அமூல் ராஜ் - செல்வராகவன் ) என்பவர் வழிப்பாதை விடாமல் பாதையை ஆகரிமிப்பு செய்து வீடு கட்டி வருகிறார். எங்களுக்கு பாதை விட்டுவிட்டு வீடு கட்டுங்கள் என்று கூறும்போது அமுல்ராஜ் செல்வராகவன், வழி எல்லாம் விடமுடியாது மீறி எதாவது கேட்டா உங்களை பெட்ரோல் ஊத்தி கொழுத்திடுவேன், கொலை செஞ்சுடுவென், என மிரட்டுகிறார்.
இவரிடமிருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், மேயர் அவர்களுக்கும், திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் இது சம்பந்தமாக மனுக்கள் கொடுத்து கூட இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என புலம்பிய சண்முகம் மற்றும் அவருடைய மகள் வைரம் செய்தியாளரை தொடர்பு கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழும் குரல் மனதை உருகுலையாக்கிவிட்டது.
பிறகு இதுகுறித்து கொரட்டூர்புறம் காவல் ஆய்வாளர்
![]() |
அவர்களிடம், சார் மனுதாரரான சண்முகத்தின் மகள் வைரத்தை பெண் காவலர்கள் இல்லாமல் அவரை விசாரணைக்கு அழைத்து வர எஸ் ஐ மகேந்திரவர்மன்சென்றுள்ளார், அந்த பெண்ணிடம் நீ என்னம்மா எதிர்பார்க்கிற என்று மிரட்டும் தோணியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி மனுதாரரின் மனுவின் மீது இதுவரை எந்த ஒரு விசாரணையில் நடைபெறவில்லை என அவர்கள் கூறுகிறார்கள் இது பற்றி உங்களுக்கு தகவல் வந்ததா என்று கேட்டவுடன் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி " பிரதர் நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ல வேலை செஞ்சுறுக்கேன் சும்மா தேவையில்லாமல் போலீஸ் மேல குத்தம் சொல்லாதீங்க னும் கோபத்துடன் மென்மையாக பேசினார்.
என்னிடம் ஆதாரம் இருக்கு ஸார் எஸ் ஐ பேசிய video ஆடியோ இருக்கு வேண்டுமென்றால் அனுப்பி விடுகிறேன் என்று பதிலளித்த போது பிரதர் அவங்கள சாயங்காலம் 6 மணிக்கு போலீஸ் ஸ்டேசன் வரசொல்லுங்க விசாரிக்கிறேன் என்று கூறிவிட்டு கொரட்டூர் காவல் நிலையம் சென்ற வைரம் மற்றும் அவரது தந்த சண்முகத்தை 7 மணி வரை காக்கவைத்துவிட்டு, இது காவல்நிலையத்தில் விசாரிக்க முடியாது எல்லாம் சிவில் கேஸ்னு சொல்லிட்டு ரிப்போர்ட்டர் கிட்ட சொல்லி என்ன பண்ண போறீங்க கொஞ்சம் அங்க அட்ஜஸ் பண்ணி போகலாமே சண்ட வராம இரு பாாத்துகோங்கப்பா, என கூறியுள்ளார். காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, மனுதாரர்கள் செய்தியாளர்கள் பேசியதை வைத்து சாலையை ஆக்கரிமிப்பு செய்து நிலசுரண்டல் மன்னனாக இருக்கும் அமூலராஜ் செல்வராக வனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உண்மையாகவே காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தியாளராக பணியாற்றிருந்தால் நிலசுரண்டல் மன்னனிடம் தகவல் கொடுத்திருக்கமாட்டார். இவர் செய்த செயல் காவல் தர்மத்திற்கும், அரசுக்கும், எதிரான செயலாக உள்ளது. இப்படி ஒரு சில காவலர்கள் இருந்தால் இல்லாத ஏழைகளுக்கு யார் ? காவல் தெய்வமாக இருப்பார். என்று உயர் அதிகாரிகள் சிந்தித்து நடவடிக்கையில் இறங்கினால் இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு நல்ல பாடமாக இருக்கும்
Comments
Post a Comment