மாணவர்களை வைத்து நோட்டீஸ் கொடுத்து விளம்பரம் செய்யும் மீனாட்சி பாலிடெக்னிக் கல்லூரி பெற்றோர்கள் அதிர்ச்சி ! கல்லூரியை அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே இயங்கி வரும் மீனாட்சி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி 2023 ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்காக விளம்பரத்திற்கு ஆள் வைத்து நோட்டீஸ் கொடுத்தால் சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதற்காக தங்களது கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வைத்து
10-ம் வகுப்பு தேர்வெழுதி வெளியே மாணவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வாசல் முன்புறம் மீனாட்சி பாலிடெக்னிக் மாணவர்கள் நோட்டீஸ் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது கிளாஸ்க்கு போகாம நோட்டீஸ் கொடுக்க வச்சிட்டாங்களா என கேட்டபோது ஆமா என்று சொல்லி தங்களது வலிகளை சொல்ல முடியாத அளவிற்கு வெளியே சிரித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை கண்ட பெற்றோர்கள் இப்படிப்பட்ட கல்லூரிகள் தங்களுடைய ஆதாயத்திற்காக எங்கள் பிள்ளைகளை சுட்டெரிக்கும் வெயிலில் நோட்டீஸ் கொடுக்கும் பணியினை செய்து வருகிறது. படிக்கும் மாணவர்களை வைத்து வேலை வாங்குவது குறித்து மாவட்ட கல்வி இயக்குனர்கள், மாவட்ட ஆட்சியர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீனாட்சி பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியரிடம் கேட்கும் போது நாங்கள் கல்லூரி சம்பந்தபட்ட எந்த நோட்டீசும் கொடுக்கல என்று மறுத்துவிட்டனர். மறுபக்கம் வேறொருவர் தொடர்பில் வந்து சார் நம்ப நிறுவனததில் விளம்பரத்திற்கு எவ்வளவு சார் ஆகுது என தங்களுடைய குற்றத்தை மறைக்க இப்படி ஒரு டீல் பேசுகிறார்.
கல்லூரி பற்றி முன்னாள் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடம் கேட்கும் போது இதில் எந்த ஒரு வசதிகளும் இல்லை, கட்டிடங்கள் இடியும் நிலையில் உள்ளது. என தங்களின் குறைகளை கொட்டி தீர்கின்றனர். உரிய அதிகாரிகள் கல்லூரியை ஆய்வு செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கல்லூரி சம்பந்தபட்ட எந்த விளம்பரம் செய்யவில்லை என்று கூறிய பின்னர் எதற்கு இவர்கள் விளம்பரத்திற்கு பேசவேண்டும் என்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தனியார் கல்லூரிகள் தாங்கள் செய்யும் மாஸ்டர் குற்ற பின்னணியில் எப்படியெல்லாம் குற்றத்தை மறைக்களாம்னு தெளிவா முடிவெடுக்குறாங்கனும் இந்த சம்பவம் உணர்த்தியது.
Comments
Post a Comment