ஊழலில் சிக்கிகொண்ட அ.பள்ளிப்பட்டி பஞ்சாயத்து சமூக ஆர்வலர்களின் கேள்வியால் திணறிப்போன அதிகாரிகள் ! பாப்பிரெட்டிப்பட்டி BDO மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய கோரிக்கை
ஒரு சில பேர் பணிக்கு செல்வதில்லை, ஆனால் அவர்கள் பணிக்கு சென்று வந்ததாக கமிஷன் பேசி ஒரு சில பணிதள பொறுப்பாளர்கள் இந்த பணமோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். மூன்று பனிதள
பொறுப்பாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர் ஆனால் இதில் இரண்டு பணிதள பொறுப்பாளர்கள் சமூக தணிக்கை கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் தகவல் கொடுத்தும் வரவில்லை, இவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் பஞ்சாயத்து தலைவர் எடுப்பதில்லை. இந்த கூட்டத்திற்கு பணிதல பணிதள பொறுப்பாளர்கள் வந்திருந்தால் இன்று சமூக தணிக்கை கூடத்தில் எந்த குழப்பங்களும் வந்திருக்காது,
தற்போது சரியாக ஏறி வேலை செய்யும் பெண்களுக்கு சரியான சம்பளம் வழங்குவதில்லை ஆள் பார்த்து ஆள் பார்த்து வேலை வழங்குவதாக என குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
இதுகுறித்து இதற்கு முன்பிருந்த வட்டரா வளர்ச்சி அலுவலர் ஆய்விற்கு வந்ததில்லை. தற்போது புதிதாக வந்திருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டுமின்றி மக்கள் பணத்தை சூறையாடும் நபர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து நடவடிக்கை எடுக்க இறங்கினால் அதனோடு ஒரு சில அதிகாரிகளும் சிக்குவார்கள் என பெண்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக கஷ்டப்பட்டு ஏறி வேலை செய்யும் பெண்களின் உழைபில் சுரண்டித்தின்னும் நபர்களை இதுவரையில் பஞ்சாயத்து தலைவர் கண்டுகொள்ளவில்லை. அரசின் நிதியில் இருந்து எங்களின் உழைப்பிக்கும் வரும் நிதியில் மோசடி நடக்கிறது, இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினால் இன்னும் பல பஞ்சாயத்து நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டறியலாம், இன்னும் இந்த அ பள்ளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு கிளார்க் நியமிக்கப்படவில்லை ஒரு வேலை கிளார்க் நியமித்திருந்தால் இது போன்ற மோசடி நடந்திருக்காது என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றசாட்டு வைக்கின்றனர்.
Comments
Post a Comment