புதுச்சேரி கடற்கரை சாலையில் சித்திரைத் திருவிழா 2023 நிறைவு விழாவையொட்டி பேஷன் ஷோ மற்றும் கண்கவர் நடனமும் நடைபெற்றது

புதுச்சேரி கடற்கரை சாலையில் சித்திரைத் திருவிழா 2023 நிறைவு விழாவையொட்டி பேஷன் ஷோ மற்றும் கண்கவர் நடனமும் நடைபெற்றது


புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் மாநிலங்களில் பல இடங்களை தேர்வு செய்து சுற்றுலா தளங்களாக அழகுப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் அவர்கள் வருகையை அதிகரிக்கவும் கடந்த ஆண்டு தமிழ் வருட பிறப்பு முதல் சித்திரை கடற்கரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 


அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை சித்திரை திருவிழா காந்தி திடல், பாண்டி மெரினா, ரூபி கடற்கரை, பேரடைஸ் கடற்கரை, சேண்டுனஸ் கடற்கரை, ஈடன் கடற்கரை,சீகல்ஸ், பாரதி பூங்கா, உசுடு படகு குழாம் ஆகிய இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 


இதில் புகழ்பெற்ற மிமிக்ரி ஆர்டிஸ்ட், நடன கலைஞர்களின் நடனம், மற்றும் இன்னிசை கச்சேரி ஆகியவையும் நடைபெற்றது


நிறைவு விழா பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்றது இதில் நடன கலைஞர்களின் கண்கவர் நடனமும் பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களும் நடைபெற்றது தொடர்ந்து நிகழ்ச்சிகளில்  பேஷன் ஷோ, இதில் ஏராளமான பெண்கள் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யாரமாக நடந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இதனை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Comments