கிளம்பிய கடும் எதிர்ப்பு.. 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

 

சென்னை: தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு சட்டசபையில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று தமிழ்நாடு சட்டசபையில் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அதாவது தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது குறித்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

 

12 மணி நேர வேலை: சில தனியார் நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு வழங்க விரும்புவதாகவும் இதை ஊழியர்கள் விரும்பினால் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணி நேரமாகவே இருக்கும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணிக் கட்சிகளே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்தச் சூழலில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

12
மணி நேர வேலை: சில தனியார் நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு வழங்க விரும்புவதாகவும் இதை ஊழியர்கள் விரும்பினால் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணி நேரமாகவே இருக்கும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணிக் கட்சிகளே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்தச் சூழலில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக அரசு: இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தொழிலாளர்களின் தலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த 21-4-2023 அன்று "2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/20231". தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாகத் தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் இன்று (24-4-2023) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

 


Comments