தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரும்பி பார்ப்பாரா ! தண்ணிரீல் சடலத்துடன் நின்று கொண்டு உதவி கேட்கும் அரூர் மக்கள் -





அரூர் அருகே காலங்காலமாக இடுப்பளவு தண்ணீரில் பிணத்தை எடுத்துச் செல்லும் கிராம மக்கள் - தரை பாலம் அமைத்து தர ஊர் மக்கள் கோரிக்கை. இல்லையென்றால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதாக முடிவு.




தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கெளாப்பாறை காலனி கிராமத்தில் சுமார் 500 குடும்பங்களில் 1500-ம் மேற்பட்டோர் வசித்து வருகின்றன. இன்று வரை இறந்தவர்களின் உடலை இடுப்பளவு தண்ணீர் உள்ள ஆற்றைக் கடந்து தான் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இன்று செந்தில், (34) என்பவர் கேன்சர் காரணமாக இன்று இறந்த நிலையில் அவருடைய உடலை இடுப்பளவு தண்ணீர் போகக்கூடிய ஆற்றில் எடுத்துச் சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இது போன்ற அவலங்களை போக்க தரைப்பாலம் அமைத்து தர வேண்டி  பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனி வரும் காலங்களில் தலைபாரம் அமைத்து தராவிட்டால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.


இது தொடர்பாக ஊர் மக்களிடம் கேட்கும்போது :


எங்கள் கிராமத்தில் இறந்தவர்கள் உடலை சுடுகாட்டிற்கு தூக்கிக் கொண்டு இடுப்பளவு தண்ணீர் போகக்கூடிய ஆற்றைக் கடந்து தான் வரவேண்டும். இல்லையென்றால் அருகில் இருக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த கிராமத்தின் வழியாகத்தான் வரவேண்டும். அப்படி நாங்கள் எடுத்து வந்தால் அவர்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். ஏற்கனவே எங்களுக்கும், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பல பிரச்சினைகள் இருக்கிறது. சிறிய பிரச்சனை என்றாலும் அதை பெரிதாக மாற்றி விட்டு சாதி ரீதியான சண்டைகள் வருவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் எங்கள் ஊரில் உள்ள சுடுகாட்டிற்கு தரைபாலம் அமைத்து தர வேண்டும்.


மேலும், இந்த இடுப்பளவு தண்ணீர் வழியாக தான் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் செல்கின்ற அவலம் இன்றளவும் நீடித்து வருகிறது. எனவே இனிவரும் காலங்களில் தலைப்பாலம் அமைத்து தராவிட்டால் ஊர் மக்கள் ஒன்று திரண்டு அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தருண போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Comments