சினிமா பாணியில் பாப்பிரெட்டிப்பட்டி போலி மருத்துவரை மடக்கிய இயக்குநர் சாந்தி தருமபுரி போலி மருத்துவர்கள் கப் சிப்!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கடசமூத்திரம் பகுதியில் தேவி என்பவர் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்தது குறித்து ஆதாரத்துடன் செய்திகள் வந்த நிலையில் இன்று தருமபுரி மருத்துவர் இணை இயக்குநர் ஊரக வளர்ச்சி மருத்துவ நல இயக்குநர் Dr.சாந்தி DGO அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்ட பின்னர் திடீரென்று போலியாக மருத்துவம் பார்த்து வந்த தேவி வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் பல்வேறு வகையான மருந்துகள் கிடைத்தன.
ஸ்டெத்தாஸ்கோப், ஸ்டெப்ளைசேர், மாத்திரைகள், 20க்கும் மேற்பட்ட குளுகோஸ் பாட்டில்கள் இருந்ததை கண்ட இயக்குநர் Dr சாந்தி அவர்கள் யாருக்காக இது என்று கேட்கும் போது இதெல்லாம் எனக்கு பல நாளாக உடம்பு சரியில்லை அதுக்கான மாத்திரைகள் என்றார்.
பிறகு மருத்துவம் பார்த்த்தற்கான சீட்டு கொடுங்க என கேட்ட போது திக்கு முகாக திணறினார். பிறகு அக்கம்பக்கம் பார்க்கும்போது 1000 கணக்கான ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த Dr சாந்தி உடனடியாக இவரை கைது செய்ய நடவடிக்கை எடுங்கள் ஏற்கனவே தருமபுரியில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு நடந்ததில் இளம்பெண் ஒருவரின் உயிர் பறிபோனது, பல்வேறு இடங்களில் மக்கள் போலி மருத்துவர்களிடம் தவறான மருத்துவம் பார்த்து விட்டு உயிருக்கு எதாவது பெருமளவில் ஆபத்து வரும்போது அரசு மருத்துவமனையில் சேர்ந்து உயிரிழந்து விடுகின்றனர்.
ஆனால் அதற்கு ஆழமான காரணம் இது போன்ற போலி மருத்துவர்கள் தான் என மக்கள் புரிந்து கொள்வதில்லை என்று கூறி தருமபுரி மாவட்டங்களில் இது போன்ற போலி வேறெங்கும் உள்ளனரா என கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் என செய்தியாளர்களிடம் கூறினார்.
Comments
Post a Comment