அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழாவில் ஒவ்வொரு பெண்களும் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என அரூர் பேரூராட்சி செயல் தெரிவித்தார் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு கலை கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேஷன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி மற்றும் பெண் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி மாணவி மாணவிகளிடம் பேசும் பொழுது. ஒவ்வொரு மாணவிகளும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும், படிப்பை யாராலும் திருட முடியாது, பெண்கள் ஒவ்வொருவரும் யாரையும் நம்பி நிற்காமல் சுயமரியாதை உடன் வாழ வேண்டும், அப்போதுதான் ஒவ்வொரு பெண்களும் சுயமரியாதையுடன் இருக்க முடியும் என தெரிவித்தார். இதில் நாட்டு நலத்திட்ட பணி அலுவலர் முனைவர் கோபிநாத் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment