நோயாளிகளை பார்வையிட மருத்துவர்களாக வளம் வரும் தெரு நாய்கள் தருமபுரி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்
தருமபுரி மருத்துவமனையில் நோயாளிகள் அதிர்ச்சி
தருமபுரி மாவட்டம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் மருத்துவ சிகிச்சைகள் சிறப்பாக இருக்கும் நிலையில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மருத்துவம் பார்க்க தருமபுரி அரசு மருத்துவமனையை நம்பி வருகின்றனர்.
மருத்துவர்களும் சிறப்பாக மருத்துவம் பார்த்து நோயாளிகளை கவனித்துவிட்டு சென்றாலும், சிகிச்சை பெற்று விட்டு ஓய்வெடுக்கும் நோயாளிகளை மருத்துவர் போல் பார்வையிட தர்மபுரியில் இருக்கும் தெருநாய்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து விடுமா அப்படிப்பட்ட சம்பவம் இங்கே அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இங்கே வரும் மக்கள் எச்சில் துப்புவது, உணவுப் பொட்டலங்களை அவசர வார்டு பகுதி அருகில் போடுவது, அதுமட்டுமின்றி ஒரு சில மின் தூக்கி சரியாக செய்லபடமால் இருப்பது இப்படி எக்கச்சக்கமான குற்றச்சாட்டுகளை வைக்கும் போது தருமபுரி மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு சுகாதரம் குறித்து விளக்கம் கொடுப்பதில்லையா இல்லை, இல்லை ஆங்காங்கே விளம்பர பேனர்களை வைத்து அதில் பெருமை தேடுகிறதா இல்ல விளம்பர பேனர் வைக்க டெண்டர் மூலம் நல்ல கமிசன் அடிக்க முயற்சி செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசு நம்பிக்கையாக சுகாதாரத்துறையை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தால் வடிவேல் காமெடியில் போறதுந்தா போற, நாய்ய உஸ்சுணு சொல்லிட்டுப் போ என்ற வசனத்திற்கு ஏற்ற வாரு மருத்துவர்கள் இங்க மருத்துவம் பார்த்துட்டா மீண்டும் வந்து நோயை பரப்பி விடுங்கள் என்று தெரு நாய்களுக்கு உத்தரவு கொடுப்பதை போல தருமபுரி அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்று பொதுமக்கள் தங்களது கருத்துக்களை கூறுகின்றனர். மருத்துவமனைக்குள் தெரு நாய்கள் உள்ளே நுழைந்தாள் மக்களுக்கு ஆபத்து இருக்குமோ இல்லையே கண்டிப்பாக இந்த தமிழக அரசுக்கு தேர்தல் நேரத்தில் இதனால் கூட ஆபத்து இருக்குமென்று அரசு உணரவேண்டும் என தருமபுரி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Comments
Post a Comment