இலக்கியம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தால் உருவான பாதாளம்... பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து சிறப்பாக செயல்படும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ?
இலக்கியம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தால் உருவான பாதாளம்... பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய ஒன்றியமாக விளங்கக்கூடிய பகுதி இலக்கியம்பட்டி பஞ்சாயத்து. இந்த இந்த பஞ்சாயத்து பகுதியில் இயங்கும் துவக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதில் சுமார் 236 மாணவர்கள் பயின்று வருவதாக கூறப்படுகிறது. இப்பள்ளியில் முழுவதுமுள்ள சுற்று சுவர்கள் விரிசலோடும், சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளதென்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியும் பஞ்சாயத்து நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இலக்கியம்பட்டி பகுதி வாழ் மக்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.
திடீரென்று இலக்கியம்பட்டி பஞ்சாயத்தின் துவக்கப்பள்ளி வாசலின் முன்பு மாணவர்கள் நுழையும் நுழைவு வாசலில் மிகப்பெரிய பாதாளம் ஏற்பட்டுள்ளது.
அப்போது யாருக்கும் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை திடீர் திடீரென்று இதுபோன்று நடப்பதால் ஏதாவது ஒரு நேரத்தில் சுற்று சுவராலும் அல்லது இது போன்ற குழிகளாலும் பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை கமிஷனுக்கு ஆசைப்பட்டு தரமற்ற பணிகளை செய்யும் ஒப்பந்த தாரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் இது போன்ற நிலைகளையும் கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து பிள்ளைகளின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Comments
Post a Comment