50 கோடி கணிமவளக் கொள்ளை ! பாப்பிரெட்டிப்பட்டி வருவாய்த்துறையும் தருமபுரி கனிமவளத்துறையும் கூட்டணி கொள்ளை..!!! வாக்குமூலம் கொடுத்த - கிராம அலுவலர் , அரசுக்கு ஆதரவு தந்தால் அரசு அதிகாரிகளுக்கு 1 பவுன் தங்க நகை பரிசு - only evidence
தமிழக முதல்வருக்கு ஆட்சிக்கு ஆப்பு வைக்கும் வகையில் 180 கோடி கணிமவளக் கொள்ளை ! பாப்பிரெட்டிப்பட்டி வருவாய்த்துறையும் தருமபுரி கனிமவளத்துறையும் கூட்டணி கொள்ளை !
தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டம் என்று ஒருபக்கம் கூறிவந்தாலும் தமிழகத்திலேயே கனிமவள "செல்வத்தால்" பணம் கொட்டும் பூமியாக இருப்பது தருமபுரி மாவட்டம்தான். இந்த மாவட்டத்தில் ஒரு சில இடத்தில் விவசாயமும் செல்வ செழிப்புடன் இருந்து வருகிறது.
ஒரு விவசாயம் செழிக்க செம்மண் முக்கியம் என்பது விவசாயிகள் வர்கத்திற்கு நன்றாகவே தெரியும். செம்மண்ணில் பல வகையான பயன்பாடுகள் கொண்ட கைவினை பொருட்கள், சமைப்பதற்கான, பொருட்கள், அதுமட்டுமின்றி வீடுகள், கட்டவும் இவைகளின் முக்கியத்து வத்தை சொல்லிகொண்டே போகலாம். இதனை அரசு அனுமதியின்றி அள்ளுவது சட்டபடி குற்றமாகும். அனுமதியோடு அள்ளினாலும் அதற்கென்று குறிப்பிட்ட அளவுகள் உள்ளது. செம்மண் சொந்த இடத்தில் இருந்தாலும் அதை வியாபார ரீதியாக பயன்படுத்த கூடாது, ஆனால் அரசின் புறம்போக்கு இடத்தில் இருந்து செம்மண் கடத்தி செங்கல் தயாரித்து வருகின்றனர். இந்த செம்மண் கடத்தலின் பின் புறத்தில் எந்த அதிகாரிகள் உள்ளனர் என்று கேள்வி எழுகிறது. ஆனால் இந்த அரசுப்புறம்போக்கு நிலத்தில் இருந்து செம்மண் கடத்தல் வியாபாரம் தருமபுரி மாவட்டத்தில் பல நூறு கோடிகளுக்கு மேலாக வியாபாரம் செய்யப்பட்டு வருவது தற்போது தருமபுரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தருமபுரி மாவட்டம் பட்டுகோனாம்பட்டி, பகுதி இருளப்பட்டி, பஞ்சாயதிற்குட்பட்ட காமராஜ் நகர், நாகளூர், பள்ளிப்பட்டி, பஞ்சாயத்துகுட்பட்ட கல்லாத்துக்காடு, போடுவராயன் மலை அடிவாரப் பகுதி,
( செம்மணல்லி குண்டல்பட்டி ) போன்ற இடங்களில் சுமார் 20 வருட காலமாக அரசு அனுமதியின்றி செம்மண் கடத்தி தருமபுரி, வருவாய்த்துறை, மாவட்ட கனிமவளத்துறை, வட்டாட்சியர், கிராம அலுவலர், அதிகாரிகளின் துணையோடு செங்கல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 50 பேருக்கும் மேல் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதியில் இந்த செம்மண் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலை ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே செய்ய வேண்டும் என்று அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படுகிறதாம். என்பதை அறிந்தால் திருட்டு தொழிலிலும் கூட சாதியாடா ? என்ற அதிர்ச்சியூட்டும் கேள்வி எழுகிறது. 20 வருட செங்கல் சூலை வியாபாரத்தில் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 180 கோடி கொள்ளை அடிக்கபட்டுள்ளதாக புள்ளி விவரம் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் அரசு அனுமதியின்றி செம்மண் கடத்தலில் வந்த 180 கோடி யாரிடம் புரலுகிறது. கொள்ளை காரர்களிடமா ? அரசு அதிகாரிகளிடமா...?? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொள்ளை அடிக்கப்பட்ட வியாபாரிகளை வருமான வருவாய்த்துறை கண்காணிக்குமா ? வருமான வருவாய்த்துறை கண்காணிப்பதற்குள், நாகலூர், சாலூர், பகுதியில் செங்கல் சூலை தயாரிக்கும் இடத்திற்கு பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சுப்பிரமணி அவர்கள், வருவாய் துறை அதிகாரி சிவகுமார், கிராம அலுவலர் கதிரவன், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அரசுடைய அனுமதியின்றி செம்மண் அள்ளுவதோ , செங்கல், தயாரிப்பது, போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இங்கிருந்து ஒரு செங்கல் கூட நகரக்கூடாது. அப்படி மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அதுமட்டுமின்றி செம்மண் தோண்டப்பட்ட 15 அடிகளுக்கு மேலாக உள்ள குளங்களை கிராமப்புற ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் செய்யப்பட்டது என்று அரசுக்கு எதிரான தகவல கொடுக்க தற்போது இருளப்பட்டி பஞ்சாயத்து மூலமாக, அங்கே பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் செம்மண் கடத்தபடுவதால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. என்று பலமுறை விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுபற்றி அங்கே குடியிருக்கும் கிராம அலுவலர் ஸார் இங்கே 50 கோடிக்கு மேலாக செம்மன் கடத்தி வருகின்றனர். இங்க இருக்கிற எல்லா அதிகாரிகளுககும் கமிசன் போகிறது, யாரும் கண்டுக்க மாட்டாங்க ஸார் என்று ஒரு அதிர்ச்சியான வாக்குமூலத்தை நம்மிடம் கொடுத்துள்ளார். ஒரு கிராம அலுவலரே இப்படி சொல்லுகிறார் என்றால் பின்புலத்தில் யார் இருப்பார்கள் என்று தமிழக அரசு களத்தில் இறங்கி ஆய்வு செய்து கடத்தலுக்கு உதவியாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் உள்ளது. இது இன்னும் நீடித்தால் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கருங்கற்கள், கிராவல் மண், போன்ற கணிம வளங்களை எடுத்து வியாபாரம் செய்வோம் என்று மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்களின் ஆதங்கத்தை கொட்டுகின்றனர்.
Comments
Post a Comment