தீர்த்தமலை எச் புதுப்பட்டி ஏ பள்ளிப்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தொடர் மின் கம்பி திருட்டில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது
தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் இருக்கும் மின்கம்பியை மட்டும் குறி வைக்கும் கொள்ளை கும்பல்
திருடிய பொருட்களை விற்ற பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கொள்ளையர்கள்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மின் கோட்டம் அலுவலகத்தில் கடந்த 6.1.23 ல் மின்சார பயன்பாட்டிற்கு வைத்திருந்த சுமார் ஒரு டன் அலுமினிய மின் கம்பியை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர் , இது குறித்து கடத்தூர் மின்வாரிய உதவி பொறியாளர் மூர்த்தி அளித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில்
கடத்தூர் அடுத்த வீரகவுண்டனூரை சேர்ந்த சந்தோஷ் குமார் வயது 27 திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது பிடிபட்ட சந்தோஷ் குமாரிடம் விசாரணை செய்ததில் காரியமங்கலம் அடுத்த என் கே புதூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் 22, கம்பைநல்லூர் அடுத்த வகுரப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் 22, காரிமங்கலம் அடுத்த சென்னன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பசுபதி 25, இருமத்தூர் அடுத்த வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சபரி 26 ,பாப்பாரப்பட்டி அடுத்த கள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி 28, ஆகியோர் மின் வயர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது மேலும் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அரூர் டிஎஸ்பி புகழேந்திகணேசன் அறிவுறுத்தலின்படி கடத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்க 10 பேர் கொண்ட தனி படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகள் அனைவரும் கம்பைநல்லூர் பகுதிகளில் பதுங்கி உள்ளனர் என்று ரகசிய தகவலை அடுத்து தனி பிரிவுபோலீசார் இன்று காலை 7 கொள்ளையர்களை கைது செய்தனர், மேலும் திருட்டு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் இரண்டு மற்றும் மினி சரக்கு (TATAAEC )வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர் மேலும் கொள்ளையர்கள் திருடிய மின் ஒயர்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து உல்லாசமாக வாழ்ந்தது விசாரணையில் தெரிய வந்தது மேலும் இவர்கள் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்சார வாரிய அலுவலகத்தில் இருக்கும் மின் கம்பியை மட்டும் திருடியது விசாரணையில் தெரியவந்தது இந்த திருட்டு ஈடுபட்ட நபர்களின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி நீதிபதியிடம் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் இந்த திருட்டு சம்பவத்தால் கடத்தூர் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது
Comments
Post a Comment