சங்கராபுரத்தில் பாஜகவிற்குள் நடந்த அடிதடி பறந்த நாற்காலி ! நாற்காலி எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு !!
சங்கராபுரத்தில் பாஜகவினர்க்கு பொறுப்பு வழங்குவதில் உட்கட்சி பிரச்சனை. நாற்காலியை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு !!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மஹாலில் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான சக்தி கேந்திரா பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட தலைவர் அருள் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதி நிர்வாகிகளுக்கு சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்களை மாற்றி புதிதாக நியமித்ததாக கூறப்படுகிறது. பழைய பொறுப்புகளில் இருந்து நிர்வாகிகளே நியமிக்க வேண்டும் அவர்கள் கட்சியில் நல்ல பணிகளை செய்து வருகிறார்கள் என மாவட்டத் தலைவரிடம் ஆரூர் ரவி கேட்டுக் கொண்டுள்ளார் .
அப்போது இடை மறித்த மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் என்பவர் புதிய நிர்வாகிகள் நியமித்தது நியமித்து தான் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என கூறியுள்ளார்,அப்போது ஆரூர் ரவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நாங்கள் மாவட்ட மாவட்டத் தலைவரிடம் தான் கேட்கிறோம், இதில் உனக்கு என்ன வேலை என கேட்க, ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் ஆரூர் ரவி ஆதரவாளர்கள் என பாஜகவினர் இரு பிரிவிலாக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் ஒரு கட்டத்திற்கு மேலாக கைகலப்பாக மாறி ஒருவருக்கு ஒருவர் அங்கு இருந்த நாற்காலியை எடுத்து தூக்கி வீசியதோடு அடித்து கொண்டனர்.மேலும் பாஜக மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பாஜக வினரே இரு அணிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments
Post a Comment