தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நவலை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை சுற்றி JCP இயந்திரம் மூலம் தூய்மைப்பணி மற்றும் மாணவ மாணவிகள் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி பள்ளமான பகுதிகளுக்கு டிராக்டர் மூலம் மண் எடுத்து சரி செய்யப்பட்டது இந்த சேவை பணியை நவலை சமூக ஆர்வலர் அரிதாஸ்
ஓட்டுநர் தலைமைச் செயலகம் சென்னை அவர்களின்
தலைமையில் தூய்மை பணி செய்யப்பட்டது இவர்களுடன்நவலை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மதிப்பிற்குரிய இரவி மற்றும் இருபால் ஆசிரியர்கள் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பசுமை அறக்கட்டளை நவலை ,ஈ. அக்ரஹாரம்,மன்ற நிர்வாக குழு தலைவர்
தலைமை செயலகம் சென்னை ஓட்டுநர் நா.அரிதாஸ், நா. சின்னமணி மற்றும் நவலை ஊர் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர் இச்சேவையை ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்
Comments
Post a Comment