#பாஜக பேனர் கிழிப்பு நாமக்கல்லில் பதற்றம் !! #EvidenceParvai #சரவனராஜன்Bjp

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல் நிலையம் அருகில் வைக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் விளம்பர பதாகை மர்ம நபர்களால் கிழிப்பு போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணராஜன் என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாமக்கல்லில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், குமாரபாளையம் காவல் நிலையம் அருகே உள்ள, சேலம் முதன்மைச் சாலையில் குமாரபாளையம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை வைக்கப்பட்டிருந்த பதாகை இன்று காலை கிழிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சியினர் ஒன்று திரண்டு குமாரபாளையம் காவல் நிலையத்தில் பாரதி ஜனதா கட்சியின் விளம்பர பதாகையை கிழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments