#EPS #OPS காலை நிச்சயம் #பாஜக வாரிவிடும் தருமபுரியில் #திமுக மேற்கு #மா.செ. #பழனியப்பன் பேச்சு

தருமபுரி : 16.12.22

எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கால்களை யாரு வாருகிறார்களோ இல்லையோ நிச்சயமாக பாஜக அரசு இவர்களின் கால்களை வாரும் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சர்ச்சை பேச்சால் பரபரப்பு.

தருமபுரி மாவட்டம், அரூர் கச்சேரி மேட்டில் திமுக முன்னாள் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக மேற்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கலந்துக்கொண்டு பேசியபோது, அதிமுகவினர் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழக முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர், பாஜக ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் விலை, கேஸ் சிலிண்டர் உருளை எரிவாயு உள்ளிட்ட விலை உயர்வுகளை கண்டித்து அதிமுகவினர் ஆட்சியில் இருக்கும் பொழுது ஏதாவது ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்களா ? ஆர்ப்பாட்டம் நடத்துவதற்க்கு அவர்களுக்கு உரிமை, தைரியம், திராணி இல்லை எனவும் அடித்தட்டு மக்களை பாதிக்காதா என்று அவர்கள் அப்பொழுது எண்ணி பார்க்கவில்லை. திமுகவில் மிட்டா மிராசுதாரர்கள் தான் பதவிக்கு வர முடியும் என்றும், என்னைப் போன்ற சாதாரண தொண்டர்கள் பதவிக்கு வர முடியாது என எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். தமிழக முதல்வர் பதவியை சசிகலாவின் காலில் விழுந்து எப்படி வாங்கினார் என்று அருகே இருந்த எனக்கு தான் தெரியும். அன்றைக்கு அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக பதவியை வாங்கினார், பழனிச்சாமி பதவி பரிபோய்விடக்கூடாது என்பதற்காக பன்னீர்செல்வத்தை தக்க வைத்துக்கொண்டார். இன்றைக்கு அவர்களின் கால்களை யார் வாருகிறார்களோ இல்லையோ நிச்சயமாக பாஜக அரசு இவர்களின் கால்களை வாரும் என்பதுதான் நாட்டின் நிலைமை என தெரிவித்தார்.

Comments